Lamborghini car accident : உலகின் அதிவேக மாடலாக பார்க்கப்படும் சூப்பர் காரான லம்போர்கினி ஹல்லர்டோ காரை இளைஞர் ஒருவர் விபத்தில் சில்லு சில்லாக நொருக்கிய காட்சி கார் பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Advertisment
நம்ம ஊர்ல கார் பிரியர்கள் முதன்முதலாக வாங்கும் காரை புது பொண்டாட்டி போல் பார்த்துக் கொள்வார்கள். இவர்களை யார் எப்படி கலாய்த்தாலும் சரி கார்களின் மீது அவர்கள் கொள்ளும் தீராத காதலே இதற்கு காரணம். அதுவும் கோடிக்கோடியாய் கொட்டி வாங்கும் சூப்பர் காரான லம்போர்கினி என்றால் ரோட்டில் கூட நிறுத்த மாட்டார்கள்.
அந்த அளவுக்கு அந்த கார் ரிட்ச் அண்ட் லுக்கானது. ஆனால் லண்டனின் இந்த ல்ம்போர்கினி காரை வாங்கிய சில நிமிடங்களிலே சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் சில்லு சில்லாக நொருக்கிய காட்சி கார் பிரியர்களை நிச்சயம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும்.
லண்டனில் இளைஞர் ஒருவர், 3 கோடி ரூபாய் செலவு செய்து லம்போர்கினி காரை புத்தம் புதுசாக தரம் இறக்கினார். இவர் இந்த காரை வாங்குகிறார் என்ற தகவல் கிடைத்ததுமே மீடியா கேமராக்களுடன் அங்கு குவிந்தது.
Advertisment
Advertisements
இவ்வளவு விலையுர்ந்த கார், அதை வாங்கிய தன்னை படமெடுக்க இத்தனை கூட்டம் என்றதுமே தலைக்கால் புரியாத அந்த நபர் காரில் சாகசம் காட்ட முயன்று கடைசியில் சுக்குநூறாக நொறுங்கிவிட்டார் காரை. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களுக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.ஆனால் இனி இந்த காரை மீண்டும் பழுது பார்ப்பதற்கு பல லட்சம் ஆகும் எனவும்,அது வரை இந்த கார் வெறும் குப்பை என கார் மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கார் விபத்தான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லம்போர்கினி சூப்பர் காரை சொந்தமாக்க வேண்டும் என்பது எத்தனையோ பேரின் கனவாக இருக்கும். ஆனால் கிடைத்த பொக்கிஷத்தை இப்படி வீணாக்குவது அதை பெற முடியாதவர்களுக்கு மட்டுமே தெரிந்த வலி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news