முன்னாள் இலங்கை அதிபரை கொல்ல முயன்ற குற்றவாளியை நாடுகடத்துமா இந்தியா?

இந்த தாக்குதலில் 34 நபர்கள் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர்.

Lanka in talks with India to extradite criminal wanted in assassination bid on former Prez,

Lanka in talks with India to extradite criminal wanted in assassination bid on former Prez : இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்காவை 1999ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அப்போது பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார் சந்திரிக்கா.

அந்நாட்டின் பொது விவகார அமைச்சர் சரத் வீரசேகரா திஙகள் கிழமை அன்று, இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை இந்தியா இலங்கைக்கு அனுப்ப தேவையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க : இலங்கையில் முக்கிய ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீனா; தமிழகத்திற்கு மிக அருகில் சோலார் ப்ரொஜெக்ட்!

இந்த மாத ஆரம்பத்தி, இந்தியாவில் செயல்படும் இலங்கை அதிகாரிகளிடம் கிம்புலா ஆளே குணா சென்னையில் இருப்பதாக கூறியுள்ளனர். அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தது க்யூ ப்ராஞ்ச் காவல்துறை. கொலை முயற்சி மட்டும் அல்லாமல் குணாவின் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் தமிழ் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

டிசம்பர் 18ம் தேதி 1999ம் ஆண்டு கொழும்புவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் சந்திரிகாவை, இலங்கையின் ஒரே பெண் அதிபர், பெண் தற்கொலைப்படையினரால் கொல்ல சதி நடந்தது.

மேலும் படிக்க : இலங்கையின் முக்கியமான திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது ஏன்?

இந்த தாக்குதலுக்கு புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 34 நபர்கள் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு குணா இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை இண்டெர்போல் உதவியுடன் கைது செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக வீரசேகரா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lanka in talks with india to extradite criminal wanted in assassination bid on former prez

Next Story
இந்தியாவிடம் வாங்கிய 400 மில்லியன் டாலர்: கணக்கை முடித்த இலங்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com