Advertisment

லெபனான் பேஜர் தாக்குதலை தொடர்ந்து வாக்கி டாக்கீஸ், எலக்ட்ரானிக் சாதனங்கள் வெடித்து 14 பேர் உயிரிழப்பு; 450 பேர் காயம்

Lebanon walkie talkie explosions- ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹெஸ்பொலா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.

author-image
WebDesk
New Update
Lebanon walkie talkie explosions

14 dead, 450 wounded as walkie talkies, other electronic devices explode across Lebanon

லெபனானின் தெற்கிலும் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் புதன்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லாஹ் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் உட்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் வெடித்து சிதறியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹெஸ்பொலா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.

ஏற்கெனவே செவ்வாய்க் கிழமை (செப்.17), லெபனான் முழுவதும் பயங்கரமான பேஜர் வெடிப்பு தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இது வந்துள்ளது.

செவ்வாய்க் கிழமை மாலை பெய்ரூட்டில் அமைந்துள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் ஒரே நேரத்தில் திடீரென வெடித்தன. இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன.

சுமார் 5 ஆயிரம் கையடக்க பேஜர்கள் வெடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவை அனைத்துமே, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த பேஜர்கள்.

இந்த பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் போராளிக் குழுவின் பல போராளிகள் மற்றும் பெய்ரூட்டுக்கான ஈரானின் தூதர் உட்பட சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதில் 400 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில் விசாரணையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், லெபனானில் பேஜர்கள் வெடித்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கோல்ட் அப்பொலோவின் நிறுவனர் சூ சிங்-குவாங் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த BAC என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் புதனன்று இஸ்ரேலிய துருப்புக்களிடம் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் காலண்ட், நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம் - அதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை, படைகள் வடக்கு நோக்கி நகர்வதாக கூறினார்.

புதன்கிழமை குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரத்திற்குப் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை "பத்திரமாக அவர்களின் வீடுகளுக்கு" திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை சார்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை.

Read in English: 14 dead, 450 wounded as walkie talkies, other electronic devices explode across Lebanon
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lebanon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment