லோபஸ் ப்ரேட்டர் முகமது நபியின் படத்தைக் காட்டிய பிறகு, வகுப்பில் இருந்த சீனியர் நிர்வாகத்திடம் புகார் செய்தார். படிப்பில் இல்லாத மற்ற முஸ்லீம் மாணவர்கள் இந்த வகுப்பு தங்கள் மதத்தின் மீதான தாக்குதல் என்று கூறி அந்த மாணவருக்கு ஆதரவளித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மின்னசோட்டாவில் உள்ள செயின்ட் பாலில் உள்ள ஹாம்லைன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் எரிகா லோபஸ் ப்ரேட்டர். இவர் முகமது நபியின் உருவத்தை சித்தரிப்பதைத் தடை செய்யப்பட்டுள்ளது என்ற மத நம்பிக்கையை பல முஸ்லிம்கள் ஆழமாகக் கொண்டுள்ளனர் என்பது தனக்குத் தெரியும் என்கிறார். எனவே, உலகளாவிய கலை வரலாற்று வகுப்பிற்கான கடைசி செமஸ்டரில், இஸ்லாத்தின் நிறுவனரின் 14-ம் நூற்றாண்டு ஓவியத்தைக் காண்பிப்பதற்கு முன்பு அவர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார்.
பாடத்திட்டத்தில், முகமது நபி மற்றும் புத்தர் உள்ளிட்ட புனித நபர்களின் படங்கள் பாடத்திட்டத்தில் காண்பிக்கப்படும் என்று எச்சரித்தார். ஏதேனும், பிரச்னை இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
அந்த வகுப்பில், அவர் மாணவர்களை தயார்படுத்தினார். சில நிமிடங்களில், யாராவது வெளியேற விரும்பினால், வெளியேறலாம். அந்த ஓவியம் காண்பிக்கப்படும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.
பின்னர் லோபஸ் ப்ரேட்டர் படத்தைக் காட்டினார். இதையடுத்து, அவரது கற்பிக்கும் விரிவுரையாளர் வேலையை இழந்தார்.
சுமார் 1,800 இளங்கலை பட்டதாரிகள் கொண்ட இந்த சிறிய தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள், இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்னையாக மாறும் என்று பயந்து அதை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அதற்குப் பதிலாக அவர்கள் எது நடக்கக் கூடாது என்று தவிர்க்க முயன்றார்களோ அதை செய்து முடித்தார்கள். இது ஒரு தேசிய சர்ச்சை, இது முகமது நபியின் உருவத்தைக் காட்டுவது என்பது எப்போதும் புனிதமானது என்று நம்பும் முஸ்லிம்களுக்கு எதிராக கல்வி சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தாக வாதங்களை முன் வைத்தது.
டிசம்பர் 30, 2022 அன்று செயின்ட் பால், மின்னோசோட்டாவில் உள்ள ஹாம்லைன் பல்கலைக்கழக வளாகம். (ஜென் ஆக்கர்மேன்/தி நியூயார்க் டைம்ஸ்)
லோபஸ் ப்ரேட்டர் முகமது நபியின் படத்தைக் காட்டிய பிறகு, வகுப்பில் இருந்த சீனியர் நிர்வாகத்திடம் புகார் செய்தார். மற்ற முஸ்லீம் மாணவர்கள், படிப்பில் இல்லாதவர்கள், இந்த வகுப்பு தங்கள் மதத்தின் மீதான தாக்குதல் என்று கூறி அந்த மாணவருக்கு ஆதரவளித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவரது பணி அடுத்த செமஸ்டருக்கு இனி தேவையில்லை என்று லோபஸ் ப்ரேட்டரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், இந்த சம்பவம் இஸ்லாமிய வெறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹாம்லைனின் தலைவர் ஃபைனீஸ் மில்லர், முஸ்லீம் மாணவர்களுக்கான மரியாதை "கல்வி சுதந்திரத்தை பாதித்திருக்கும் என்று ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளர். டவுன் ஹாலில், அழைக்கப்பட்ட முஸ்லீம் பேச்சாளர், அடோல்ஃப் ஹிட்லர் நல்லவர் என்று கற்பிப்பதோடு படங்களைக் காட்டுவதுடன் ஒப்பிட்டார்.
பேச்சுரிமை ஆதரவாளர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். ஒரு இஸ்லாமிய கலை வரலாற்றாசிரியர் லோபஸ் ப்ரேட்டரை ஆதரித்து ஒரு கட்டுரையை எழுதினார் மற்றும் பல்கலைக்கழக வாரியம் இந்த விஷயத்தை விசாரிக்கக் கோரி ஒரு மனுவைத் தொடங்கினார்கள். அதில் 2,800-க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் இருந்தன. பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தும் குழுக்கள் மற்றும் வெளியீடுகள் விமர்சனங்களை வெளியிட்டன; பென் அமெரிக்கா இதை “சமீபத்திய நிகழ்வுகளில் கல்வி சுதந்திரத்தின் மிக மோசமான மீறல்களில் ஒன்று” என்று அழைத்தது. மேலும், இந்த நடவடிக்கை இஸ்லாமோஃபோபியா என்று முஸ்லிம்களே விவாதித்தனர்.
கல்விச் சுதந்திரம் குறித்த வாதங்கள் பல ஆண்டுகளாக வளாகங்களில் சண்டைகளாக வருகின்றன. ஆனால், அவை குறிப்பாக ஹாம்லைன் போன்ற சிறிய தனியார் கல்லூரிகளில் நிறைந்திருக்கலாம்.
லோபஸ் ப்ரேட்டரின் நிலைமை குறிப்பாக ஆபத்தானது. அவர் உயர்கல்வி கீழ்நிலை ஆசிரியர்களில் ஒருவர், குறைந்த ஊதியத்திற்கு பணிபுரிகிறார். பணியிடப் பாதுகாப்பில் சிறிதளவு ஊதியம் பெற்றவர்.
பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் நேர்காணலை நிராகரித்தனர். ஆனால், மில்லர் ஒரு அறிக்கையில் இந்த முடிவை ஆதரித்தார்.
“பல முஸ்லிம்களுக்கு முகமது நபியின் உருவத்தைப் பார்ப்பது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானது” என்று மில்லரின் அறிக்கை கூறுகிறது. “எங்கள் வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும், எங்கள் முஸ்லிம் மாணவர்களும் மற்ற அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், மரியாதையுடனும் இருப்பது முக்கியம்.” என்று கூறியுள்ளார்.
நிர்வாகத்திடம் புகார் செய்த மாணவர் வெடடல்லா, பள்ளி செய்தித்தாளுக்கு டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், ‘அராம்’ என்று விவரித்தார்.
“இது உண்மையாக இருக்க முடியாது” என்று வெடடல்லா கூறினார். பொது மன்றத்தில் தன்னை சூடானியர் என்று விவரித்தார். “ஒரு முஸ்லீம் மற்றும் கறுப்பினத்தவர் என்ற முறையில், நான் என்னைச் சேர்ந்தவனாக உணரவில்லை, மேலும் அவர்கள் என்னை உறுப்பினராக மதிக்காத சமூகத்தில் நான் சேர்ந்திருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. நான் அவர்களுக்குக் காட்டும் அதே மரியாதையை அவர்கள் காட்டுவதில்லை.” என்று கூறினார்.
இஸ்லாமிய வெறுப்பு பற்றி புத்தகங்களை எழுதிய டோட் கிரீன், ஹாம்லைனில் ஏற்பட்ட மோதல் துயரமானது என்று கூறினார். ஏனெனில், நிர்வாகிகள் இயற்கையான கூட்டாளிகளை - முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் ஒரே மாதிரியான கருத்துக்கள் பற்றி அக்கறை கொண்டவர்கள் - ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தினார்கள்.
லோபஸ் ப்ரேட்டரின் வகுப்பில் காட்டப்பட்டுள்ள ஓவியம், 14 ஆம் நூற்றாண்டில் ரஷித்-அல்-தின் (1247-1318) என்பவரால் எழுதப்பட்ட உலகின் ஆரம்பகால இஸ்லாமிய விளக்கப்பட வரலாறுகளில் ஒன்றாகும்.
கலை வரலாற்று வகுப்புகளில் தவறாமல் காட்டப்படும், இந்த ஓவியம் சிறகுகள் கொண்ட முடிசூட்டப்பட்ட தேவதை கேப்ரியல் முகமதுவை சுட்டிக்காட்டி, முதல் குர்ஆன் கூறுவதை காட்டுகிறது. குர்ஆன் கேப்ரியல் மூலம் முகமதுக்கு கூறிய அல்லாஹ்வின் வார்த்தைகளால் ஆனது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இந்த படம் பாரசீக கையெழுத்துப் பிரதி ஓவியத்தின் தலைசிறந்த படைப்பு என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கலைப் பேராசிரியரான கிறிஸ்டியன் க்ரூபர் கூறினார். இது எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ளது; மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் போன்ற இடங்களில் இதே போன்ற ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீர்க்கதரிசியின் சிற்பம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இஸ்லாமியக் கலையைக் காட்டுவதும், முகமது ஓவியங்களைக் காட்டுவதும் கல்வியில் மிகவும் பொதுவானதாகிவிட்டதாக க்ரூபர் கூறினார். ஏனெனில், காலனித்துவப் பார்வையைத் தாண்டி - அதாவது மேற்கத்திய மாதிரிக்கு அப்பால் பாடத்திட்டத்தை விரிவுபடுத்துவது பொதுவானதாகிவிட்டது.
லோபஸ் ப்ரேட்டரைப் ஆதரித்து நியூ லைன்ஸ் இதழில் கட்டுரை எழுதிய க்ரூபர், “வரலாற்று காலகட்ட படத்தொகுப்பு இல்லாமல் இஸ்லாமியக் கலையைப் படிப்பது மைக்கேலேஞ்சலோவின் டேவிட் கற்பிக்காதது போல இருக்கும்” என்று கூறினார்.
இருப்பினும், குரான் தடை செய்யாவிட்டாலும், முகமதுவின் உருவத்தை சித்தரிக்கும் காட்சிப் படங்களைப் பார்க்கக் கூடாது என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முகமதுவின் உருவம் அவர் சேவை செய்த கடவுளைவிட தீர்க்கதரிசியை வணங்குவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பலவிதமான நம்பிக்கைகள் உள்ளன. சில முஸ்லீம்கள் மரியாதைக்குரிய சித்தரிப்பு மற்றும் கேலிச் சித்திரங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றனர், மற்றவர்கள் இந்த தடையை ஏற்கவில்லை.
டியூக் பல்கலைக்கழகத்தின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகளின் பேராசிரியரான ஓமிட் சஃபி, லோபஸ் ப்ரேட்டர் சிறப்பு வழிமுறைகள் இல்லாமல் வகுப்பில் முகமதுவின் படங்களை தொடர்ந்து காண்பிப்பதாகக் கூறினார். இந்த படங்கள் பக்திமிக்க ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் பக்திமிக்க கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பக்தி படைப்புகள் என்று அவர் தனது மாணவர்களுக்கு விளக்குகிறார்.
“எனது மாணவர்கள் போராட வேண்டும் என்று நான் விரும்பும் இடம் இதுதான்” என்று சஃபி கூறினார். “பாரம்பரியத்திற்கு நடுவில் இருந்து வரும் ஒன்று எப்படி விளிம்புநிலை அல்லது தடைசெய்யப்பட்ட ஒன்றாகப் பார்க்கப்படுகிறது?” என்று கேட்கிறார்.
ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
கலை கோட்பாட்டாளரான லோபஸ் ப்ரேட்டர், அக்டோபர் 6 அன்று 30 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுடன் தனது ஆன்லைன் விரிவுரையைத் தொடங்கியபோது, மோதலுக்கான சாத்தியம் இருப்பது பற்றி தனக்குத் தெரியும் என்று கூறினார்.
தான் ஏன் படத்தைக் காடினேன் என்றால், வெவ்வேறு மதங்கள் எவ்வாறு தெய்வீகத்தை சித்தரிக்கின்றன. காலப்போக்கில் தரநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை விளக்க சில நிமிடங்கள் செலவழித்ததாக அவர் கூறினார்.
“இஸ்லாமியக் கலையை ஒற்றைத் தன்மையான ஒன்றாக நான் முன்வைக்க விரும்பவில்லை” என்று அவர் ஒரு நேர்காணலில் கூறினார். ஒரு பட்டதாரி மாணவியின் படத்தைக் காட்டினார். முகமது முக்காடு அணிந்திருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாவது படத்தையும் அவர் காட்டினார்.
லோபஸ் ப்ரேட்டர், அப்போது வகுப்பில் யாரும் கவலைப்படவில்லை என்றும், அவமரியாதை வர்ணனை இல்லை என்றும் கூறினார்.
வகுப்பு முடிந்ததும், வணிகவியல் மாணவரும் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர் சங்கத்தின் தலைவருமான வெடடல்லா, தன் பிரச்னையைக் கூறிக்கொண்டே இருந்தார்.
உடனே, லோபஸ் ப்ரேட்டர் தனது துறைத் தலைவரான அலிசன் பேக்கருக்கு இந்த எதிர்ப்பு பற்றி மின்னஞ்சல் அனுப்பினார்; வெடடல்லா புகார் கூறலாம் என்று நினைத்தார்.
டிஜிட்டல் மற்றும் ஸ்டுடியோ கலைத் துறையின் தலைவரான பேக்கர் 4 நிமிடங்களுக்குப் பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளித்தார்.
“நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்துள்ளீர்கள் போல தெரிகிறது. நான் கல்வி சுதந்திரத்தை நம்புகிறேன், அதனால் உங்களுக்கு எனது ஆதரவு உள்ளது.” என்று பேக்கர் கூறினார்.
லோபஸ் ப்ரேட்டர் கணித்தபடி, வெடடல்லா நிர்வாகிகளை அணுகினார். லோபஸ் ப்ரேட்டர், பேக்கரின் உதவியுடன் மன்னிப்புக் கேட்டு, “சில சமயங்களில் பன்முகத்தன்மை என்பது முரண்பாடான, சங்கடமான மற்றும் இணைந்திருக்கும் உண்மைகளை ஒருவருக்கொருவர் உரையாடலுக்குக் கொண்டுவருவதை உள்ளடக்கியது” என்று விளக்கினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.