அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தங்க கழிப்பறை தருவதாக பிரபலமான மியூசிம் ஒன்று கடிதம் அனுப்பி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற 'குஹ்ஹெனீம்' அருங்காட்சியத்தில் உள்ள ஓவியம் ஒன்றை சமீபத்தில் ட்ரம்ப் பார்த்து வியந்துள்ளார். அந்த ஓவியத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துக் கொள்ளவும் அவர் முடிவு செய்தார். இதனையடுத்து, ட்ரம்ப் குஹ்ஹெனீம் அருங்காட்சியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், ஓவியர் வான்கா வரைந்த ’லேண்ட்ஸ்கேப் அண்ட் ஸ்னோ’என்ற ஓவியத்தை வெள்ளை மாளிகையில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார், இந்த கடிதத்தை படித்த அருங்காட்சியம் யாரும் எதிர்ப்பார்க்க வகையில், ட்ரம்பிற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதில், 1888 ல் வான்கா வரைந்த ஓவியத்தை விற்கும் எண்ணம் அருங்காட்சியத்திற்கு தற்போது இல்லை என்றும், ஆனால் அதிபர் ட்ரம்ப் கேட்டதற்காக அவருக்கு, ’அமெரிக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள தங்கத்தினால் ஆன, கழிப்பறை ஒன்றை சில காலங்கள் வாடைக்கு தருவதாக தெரிவித்துள்ளது. இந்த கடிதத்தை கண்ட வெள்ளை மாளிகை நிர்வாகம் அதிர்ச்சிய்டைந்துள்ளது.
அதனுடன், அருங்காட்சியகம் அனுப்பிய இந்த கடிதம் குறித்த தகவல் அமெரிக்கா சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனை கேள்விப்பட்ட அமெரிக்க மக்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ட்ரம்ப் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிபரை அசிங்கப்படுத்திய அருங்காட்சியத்தின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்த கடிதம் குறித்து அதிபர் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.