பிரபல காமெடி சீன் வால்ஷ் தனது பள்ளி பருவத்தில் டீச்சருக்கு தன தந்தை எழுதிய கடித்தம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆங்கில மேடை நகைச்சுவை கலைஞரான சீன் வால்ஷ் பேசியே ரசிக்க வைப்பத்தில் வல்லவர். இவரின் மேடை நகைச்சுவைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம். இவர், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கடிதம் ஒன்று, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சீன் வால்ஷீன் பள்ளி பருவத்தில், தொடர்ந்து ஒரு வாரங்கள் அவர் ஒரே பள்ளி சீருடையை அணிந்து சென்றுள்ளார். இதனால் அந்த சீருடை அழுக்காகி, வியர்வை நாற்றம் வீசியுள்ளது. இதனால், வால்ஷீன் வகுப்பு ஆசிரியர் அவரின் பெற்றோர்களை அழைத்து வரும் படி உத்தரவிட்டுள்ளார்.
வீட்டிற்கு சென்று, தன் தந்தையிடம் சீன் வால்ஷீன் இதுக் குறித்து சொல்லி அழுதுள்ளார். உடனே, அவரின் தந்தை சீன் வால்ஷீன் வகுப்பு ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “என் மனைவி ஒருவாரம் ஊருக்கு சென்றதால் என் மகனின் பள்ளி சீருடையை துவைக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு வாஷீங் மிஷீனை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதும் தெரியாது. மன்னித்து விடுங்க. மீண்டு இதுப் போன்ற ஒரு சம்பவம் நடைப்பெறாது” என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்த சீன் வால்ஷீன் தற்போதை அதை தனது ட்விட்டரில் பகிர்ந்து, தனது தந்தையின் நேர்மை குணத்தை பற்றி நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.