Lion Air flight JT 610 : இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது. 188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.
லையன் ஏர் குரூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எட்வர்ட் சிரைட் இது குறித்து கூறும் போது “தற்போதைக்கு எந்த விதமான தகவல்களையும் உறுதியுடன் கூற இயலாது” என்று கூறிவிட்டார். இது தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க
விமானத்தில் பயணித்த அனைவரும் பலியா ?
இன்று காலை ஜகர்தாவில் இருந்து பங்கல் பினாங்க் நகரம் வரை செல்ல இருந்த விமானம் நடுவானில் மயமானது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் நொறுங்கி கடலுக்குள் விழுந்துவிட்டது என்ற தகவல்கள் வெளியானது. விமானத்தில் பயணமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் அனைவரும் இறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அளித்திருக்கிறது இந்தோனேசிய அரசு.
தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
பங்கல் பினாங்க் விமான நிலையத்தில் குவிந்த உறவினர்கள்
இதுவரை விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியாக நிலையில் ஜகார்தா மற்றும் பங்கல் பினாங்க் விமான நிலையங்களுக்கு 181 பேர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். பயணித்தவர்களின் நிலை குறித்து தகவல்கள் ஏதாவது வெளியாகுமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்
விமான விபத்து குறித்து உடனடியாக விசாரணை : அதிபர் ஜோக்கோ விடோடோ
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திடம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ. மக்கள் தங்களின் பிரார்த்தனைகள் விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Lion Air flight JT 610 விமான ஓட்டி பவ்யே சுனேஜா இந்தியர்
டெல்லியை சேர்ந்த பவ்யே சுனேஜா இன்று காலை வெடித்துச் சிதறிய விமானத்தை ஓட்டியவர் என தகவலகள் வெளியாகியுள்ளது. லையன் ஏர் ஃப்ளைட் நிறுவனத்தில் 2011ம் ஆண்டில் இருந்து வேலை செய்து வருகிறார். 6000 மணி நேரங்களுக்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டிருப்பவர் பவ்யே சுனேஜா.
737 மேக்ஸ் 8 விமானத்தை இன்று காலை ஓட்டிச் சென்ற பவ்யே சுனேஜா
இரண்டு பச்சிளங் குழந்தைகளுடன் பயணித்த JT610
6 விமான ஊழியர்கள், இரண்டு விமான ஓட்டிகள், 181 பயணிகள் என 189 நபர்கள் மாயம். அந்த 181 பயணிகளில் 1 குழந்தை மற்றும் 2 பச்சிளங்குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெல்ப்லைன் எண்கள்
விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலையை அறிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்களை அறிவித்திருக்கிறது இந்தோனேசிய அரசாங்கம். 021-80820000 மற்றும் 021-80820002 இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது லையன் ஏர்லைன் நிறுவனத்தின் தொடர்பு மையத்தை + 62 8788 033 3170 இந்த எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கவலை
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மனம் உருகி வேண்டுதல். யாருக்கும் எதுவும் நடந்திருக்கக் கூடாது என மனம் உருகி பிரார்த்தனை.
மனம் உருகி பிரார்த்தனை செய்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்
/tamil-ie/media/media_files/uploads/2018/10/plane-crash-1.jpg)
தீவிரம் அடைந்து வரும் தேடுதல் வேட்டை
188 பயணிகளுடன் விண்ணில் சென்ற விமானம் நடுவானில் நொருங்கி சிதறியது. கடலுக்குள் வீழ்ந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி இது குறித்து கூறுகையில் “உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது” என்று கூறுகிறார்.
விபத்திற்குள்ளான விமானத்தை தேடும் பணி தீவிரம்
விமானத்தில் பயணித்தவர் ஒருவரின் கைப்பை மற்றும் உருக்குலைந்த செல்போன்
விமானத்தில் பயணித்தவர் ஒருவரின் கைப்பை
வெடித்து சிதறிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு
இந்த விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்டது என்றும், அதில் 210 பயணிகள் வரை பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்திற்குள்ளானதா விமானம் என்பது தொடர்பான எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மயமான விமானம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலைக்குள் நடைபெறும் என எட்வர்ட் சிரைட் கூறியிருக்கிறார்.