உக்ரெயின் நாட்டில் உள்ள பிரபல டெய்கான் சஃபாரி பார்க்கில், சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாயும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
Advertisment
பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்:
சஃபாரி வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் டெய்கான் பார்க்கில் உள்ள சிங்கத்தை காண வாகனத்தை நிறுத்தினர். அப்போது, எதிர்பாராத வகையில் சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாய்ந்தது. சிங்கத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஆனால் அவர்களுடன் பாதுகாவலர் இருந்ததால் சிங்கம் தாக்காமல் இருந்தது.
இருந்த போதும் வாகனத்தைக் கண்ட சிங்கம், ஏறி குதித்து பயணிகள் மீது தாவியது.அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.
எனினும், இது போன்ற சஃபாரி ரைடுகள் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சுற்றுலா பயணி ஒருவரின் கையை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது