Advertisment

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உபகரணங்கள் என்ன தெரியுமா?

உக்ரைனுக்கு ஏற்கனவே 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள், உபகரணங்கள் அமெரிக்கா சார்பில் வழங்கியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 800 மில்லியன் டாலருக்கு ராணுவ தளவாட உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உபகரணங்கள் என்ன தெரியுமா?

கொலம்பியா பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களின்பேராசிரியான ஸ்டீபன் பிடில் கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது ஆபத்தாக இருந்தாலும் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்குள் பறக்கவிடுவதும், உக்ரைன் வான்வழியில் பறக்க தடை விதிப்பது போன்ற நிகழ்வுகளை காட்டிலும், இதில் ஆபத்து குறைவு தான் என்றார்.

Advertisment

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ராணுவ உதவி கேட்டு பேசிய சில மணி நேரங்களில், ரஷ்ய படையெடுப்பை சமாளிக்க தேவையான ராணுவ தளவாட உதவிகளை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஏற்கனவே ரஷ்ய படைக்கு எதிரான உக்ரைனின் ராணுவ பதிலடிக்கு, அமெரிக்காவின் புதிய 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள், உபகரணங்கள் உதவி கூடுதல் பலத்தை சேர்த்திடும்.அதில், ரஷ்யப் படைகளால் ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வான்வழி பாதுகாப்பு அமைப்பும் அடங்கும்.

பைடனின் உறுதியளித்ததில், நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவதாக கூறியது முக்கியம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவை அமெரிக்கா தயாரிக்கப்பட்டவை கிடையாது. அது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-300 அல்லது மற்ற நேட்டோ நாடுகளின் இருக்கும் வான்வழி ஏவுகணை அமைப்பு போன்றது ஆகும். அதன் மூலம், விமானங்களை சுட்டு வீழ்த்தவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கவும் முடியும்.

மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்ரைனியர்களுக்கு பயன்படுத்த தெரிந்த உபகாரணங்கள் தான் வழங்கப்படுகிறது. இதில், உக்ரைனுக்கு அனுப்ப தயாராக இருக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்கும் என்றார்.

உக்ரைன் கேட்ட உதவிகளில் இரண்டை மட்டும் அமெரிக்காவும், நேட்டோவும் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஒன்று, ரஷ்ய தயாரிப்பான MiG-29 போர் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்புவதும், மற்றொருன்று உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது ஆகும். ஆனால், இதனை செய்தால் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்க நேரிடும் என்பதால், அதனை செய்ய முன்வரவில்லை.

கொலம்பியா பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களின்பேராசிரியான ஸ்டீபன் பிடில் கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது ஆபத்தாக இருந்தாலும் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்குள் பறக்கவிடுவதும், உக்ரைன் வான்வழியில் பறக்க தடை விதிப்பது போன்ற நிகழ்வுகளை காட்டிலும், இதில் ஆபத்து குறைவு தான். இரண்டாம் உலகப் போரின்போது, லென்ட் லீஸ் திட்டத்தின் கீழ் டாங்கிகள், குண்டுவீச்சுகள் மற்றும் பிற ஆயுதங்கள் இங்கிலாந்து செல்வதை தடுக்க ஜெர்மனி அமெரிக்காவை தாக்கவில்லை என்றார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க முன்வந்துள்ள புதிய உபகரணங்கள் லிஸ்ட்

  • 800 ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு அமைப்புகள்
  • 2,000 தரையிலிருந்து வான்வழியாக தாக்கும் ஜாவெலின் ஏவுகணைகள்
  • 1,000 லைட் கவச எதிர்ப்பு ஆயுதங்கள்
  • 6,000 AT-4 போர்ட்டபிள் ஆன்டி டாங்க் ஆயுதம்
  • 100 டெக்டிகல் ஆளில்லா அமைப்புகள்
  • 100 கையெறி குண்டுகள்
  • 5,000 துப்பாக்கிகள், 1,000 கைத்துப்பாக்கிகள், 400 மிஷின் துப்பாக்கிகள் மற்றும் 400 ஷாட் துப்பாக்கிகள்
  • 20 மில்லியனுக்கும் அதிகமான தோட்டக்கள், கையெறி குண்டுகள் லான்சர், மோட்டார் குண்டுகள்
  • 25,000 உடல் கவசம் மற்றும் தலைக்கவசங்கள்

ஏற்கனவே அமெரிக்கா வழங்கியது அல்லது உறுதியளித்த உபகரணங்கள்

இதுவரை அமெரிக்கா 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை, உக்ரைனுக்கு வழங்கியது. அவை

  • 600 ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு அமைப்புகள்
  • 2600 ஜாவெலின் தடுப்பு கவச அமைப்பு
  • 5 Mi-17 ஹெலிகாப்டர்
  • 3 ரோந்து படகு
  • 4 ஆளில்லா வான்வழி அமைப்பு கண்காணிப்பு ரேடார்கள்
  • நான்கு மோர்டார் ரேடார் அமைப்புகள்
  • 200 கையெறி குண்டுகள், வெடிமருந்துகள்
  • 200 ஷாட் துப்பாக்கி, 200 மிஷின் துப்பாக்கி
  • 40 மில்லியன் சிறிய துப்பாக்கி தோட்டக்கள் மட்டுமின்றி 1 மில்லியனுக்கும் அதிகமான கையெறி குண்டுகள், மோட்டார் மற்றும் பீரங்கி குண்டுகள்
  • 70 ஹை மொபிலிட்டி மல்டிபர்போஸ் வாகனங்கள்
  • பாதுகாப்பான தகவல் தொடர்பு, மின்னணு போர் கண்டறிதல் அமைப்புகள், உடல் கவசம், தலைக்கவசங்கள் மற்றும் டேக்டிக்கல் கியர்
  • ராணுவ மருத்துவ உபகரணங்கள்
  • வெடிகுண்டுகளை அகற்றுதல் மற்றும் கண்ணிவெடி அகற்றும் கருவிகள்
  • செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பகுப்பாய்வு திறன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Russia America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment