லண்டனில் சமோசா வாரம்... இந்தியர்கள் உற்சாகம்.

பிரிட்டன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 9ம் தேதி முதல் சமோசா வாரம். லண்டன் உட்பட பல்வேறு முக்கிய பெருநகரங்களில் சாமோசா வாரம் கொண்டாட்டம்.
பிரிட்டன் நகரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லீசெஸ்டரில் வரும் ஏப்ரல் 9 முதல் 13 வரை தேசிய சமோசா வாரம் கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் லீசெஸ்டர் உடன் லண்டன், பிர்மிங்காம், மான்செஸ்டர், கொவெண்ட்ரி, நாட்டிங்காம்ஷைர், ராட்லெட் ஆகிய நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த சமோசா வாரக் கொண்டாட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியர்கள் சமோசாவை உண்டு, சமைத்து, விற்று மகிழலாம். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பிரிட்டனில் இந்தியர்களின் உணவைத் தேசிய வாரமாகக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் தெரிவித்தனர்.

×Close
×Close