/indian-express-tamil/media/media_files/2025/09/24/macron-stopped-by-nypd-2025-09-24-11-09-39.jpg)
பிரான்ஸ் அதிபர் காரை தடுத்து நிறுத்திய அமெரிக்க போலீஸ்... நடந்தே தூதரகம் சென்ற மேக்ரான்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.பொதுச்சபையின் 80-ஆவது அமர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவில் குவிந்தனர். இதனால் நியூயார்க் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது, நியூயார்க் நகரில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதன் காரணமாக வாகனத்தில் இருந்து வெளியேறிய மேக்ரான், சாலையோரத்தில் காத்திருந்தார். அவரை அவ்வாறு காக்க வைத்ததற்காக அருகில் இருந்த காவல்துறை அதிகாரி மன்னிப்பு கோரினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
🚨 LMAO! In NYC for the UN, police halted French President Macron’s motorcade for President Trump…
— Eric Daugherty (@EricLDaugh) September 23, 2025
…Macron calls Trump and it appears he was just told to walk, because he just starts walking multiple blocks
47 is way more important, Macron 🤣🔥
pic.twitter.com/LiKxq1PM14
மேக்ரான் தனது காரில் இருந்து வெளியே வந்து, அதிபர் ட்ரம்ப்பை உடனடியாகத் தொலைபேசியில் அழைத்து நகைச்சுவையாக, “என்ன நடக்கிறது என்று யூகித்துச் சொல்லுங்கள்? உங்களுக்காக எல்லாவற்றையும் மறித்து வைத்திருப்பதால் நான் தெருவில் சிக்கிக்கொண்டேன்,” என்று கூறியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, சாலை மீண்டும் திறக்கப்பட்டது. அதிபர் மேக்ரான் நடந்துசெல்ல ஆரம்பித்தார். தெருக்களில் நடந்து சென்று, மக்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு பின்னர் பிரெஞ்சு தூதரகத்தை அடைந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத்தில் (80th UN General Assembly) கலந்துகொள்வதற்காக அதிபர் மாக்ரோன் நியூயார்க் வந்துள்ளார். இங்கு, பிரான்ஸ், சவூதி இணைந்து நடத்திய உச்சி மாநாட்டில் (summit), பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது குறிப்பிடத்தக்க இராஜதந்திர (diplomatic) முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த முடிவை இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நாடுகள் "பயங்கரவாதத்திற்கு மிகப் பெரிய பரிசை வழங்குகின்றன," என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.