இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் விற்பனை!

சக மனிதருடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா தனது கைகளால்  எழுதியிருந்த அச்சு  கடிதம், அமெரிக்காவில்  விற்பனைக்கு வந்துள்ளது .

 

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி காந்தி இந்த கடிதத்தை எழுதியா கூறப்படுகிறது. இந்தியாவின் சபர்மதி ஆசிரமத்திலிருந்த போது காந்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். வரலாற்று பொக்கிஷமான இந்த கடிதம் தற்போது, பென்ஸில்வேனியாவை மையமாகக் கொண்ட ராப் கலெக்‌சனால் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுக்குறித்து பேசிய புகழ்பெற்ற விற்பனையாளர்கள் இயேசுவை பற்றி காந்தி குறிப்பிட்ட வேறு எந்தக் கடிதமும் பொதுச் சந்தைக்கு வந்தாக எங்கள் ஆய்வில் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். காந்தியின் கைகளால் எழுதப்பட்ட இந்த அசல் கடிதத்திற்கு அமெரிக்க டாலரில் 50,000 என்று நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

மதம் குறித்து காந்தி இதுவரை பல கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் மிக சிறந்ததாக கருதப்படுவது இயேசு கிறிஸ்து குறித்து அவர் எழுதிய இந்த கடிதம் தான். காந்தியின் பார்வையில் உலகத்தின் மதங்கள் அனைத்தும் சமாதானத்திற்காகவே உருவானதாகவும், மனிதகுலத்தின் போதனையாக இயேசுவைக் குறித்த அவரது நம்பிக்கை, சக மனிதருடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close