Advertisment

இலங்கை தேர்தல் : மாபெரும் வெற்றியை பெற்றது மகிந்த ராஜபக்‌ஷேவின் கட்சி

ஆகஸ்ட் 5ம் தேதி 16 மில்லியன் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

author-image
WebDesk
New Update
Cow slaughter ban in Sri lanka

Mahinda Rajapaksa-led SLPP registers landslide victory in Sri Lanka’s parliamentary polls :  இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு பிரவேசம் செய்துள்ளார் இலங்கையின் மகிந்த ராஜபக்‌ஷே. இருமுறை ஒத்திவைக்கப்பட்டு பின்பு நடத்தப்பட்ட தேர்தலில் ராஜபக்‌ஷேவின் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை மக்கள் கட்சி (Sri Lanka People’s Party (SLPP)) மொத்தம் உள்ள 150 கட்சிகளில் 145 இடங்களில் வெற்றி பெற்று, 255 நபர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

Advertisment

பிரதமர் தலைமையிலான இந்த கட்சி 22 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் தவிர அனைத்திலும் வெற்றி பெற்றார். சிங்கள பெரும்பான்மை அதிகம் கொண்ட தெற்கு மாவட்டங்களில் இந்த கட்சி 60% வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தமாக 6.8 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளது இந்த கட்சி.

To read this article in English

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ராஜபக்‌ஷேவிற்கு வாழ்த்துகள் தெரிவித்த உலக தலைவர்களில் மோடியும் ஒருத்தர். இரு தரப்பில் இருந்தும், இரு நாட்டு உறவினை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் பேசினார். இது குறித்து ராஜபக்‌ஷே வெளியிட்ட ட்வீட்டில், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு மற்றும் உறவினை வலுப்படுத்துவோம்” என்றும் அவர் ட்வீட்டில் கூறீயுள்ளார்.

 

நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்‌ஷே, 6 மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறீனார். பாராளுமன்றத் தேர்தலில், பாராளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்தும் அதே வேளையில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்திய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய, முக்கியமாக அரசியலமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்த, 150 இடங்களை கட்டாயமாகக் கோரியுள்ளார்.

இதனால் பெரும் விபத்தை சந்தித்தது யுனைட்டட் நேசனல் பார்ட்டியின் ரணில் விக்ரமசிங்கே தான். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது இந்த கட்சி. அதுவும் தேசிய அளவில் எண்ணப்பட்ட வாக்குகளின் மூலமாக. ஆனால் 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற்றவில்லை. 1977ம் ஆண்டு அரசியலுக்கு வந்த ரணில் விக்ரமசிங்கே 4 முறை பிரதமராக பதவி வகித்தார். ஆஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனது இந்த முறை தான். கொழும்பில் அவர் வெற்றி பெறவில்லை. அவருடைய கட்சி நான்காம் இடத்தையே இம்முறை தக்க வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 2,49,435 வாக்குகள் அல்லது 2% வாக்குகளை மட்டுமே பெற்றது.

விக்ரமசிங்கேவின் துணை பிரதமர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் ப்ரம்மதேசா அந்த கட்சியில் இருந்து பிரிந்து சொந்த கட்சியின் மூலம் இம்முறை போட்டியிட்டார். இஸ்லாமிய பெரும்பான்மை அதிகம் கொண்ட தொகுதிகள் உட்பட 55 தொகுதிகளில் வெற்றி பெற்றார் அவர். இந்த கட்சிக்கு 2.7 மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதியில் இருக்கும் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியும் இம்முறை பெரிதாக ஜெயிக்க முடியவில்லை. கடந்த முறை 16 தொகுதிகளில் வென்றது. ஆனால் இந்த முறை 10 இடங்களில் மட்டுமே வெற்றியை தக்க வைத்தது. தமிழ் மக்கள் வாழும் பகுதியில் மூன்று மாவட்டஙக்ளில் வெற்றியை கைப்பற்றியது. 3,27,168 வாக்குகள் பதிவாகியது.

முந்தைய தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி தற்போது 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அக்கட்சிக்கு 4,45,958 வாக்குகளை பெற்று யு.என்.பி.ஐ பின்னுக்கு தள்ளியது.

அதிபர் கோட்டபய ராஜபக்‌ஷே மார்ச் 2ம் தேதி பாராளுமன்றத்தை கலைத்தார். ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் நாடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு ஜூன் 20ம் தேதிக்கு, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 20ம் தேதியும் தேர்தல் நடத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டது. பிறகு தேர்தல் ஆணையம் பல்வேறு முறை மாதிரி தேர்தல்களை (சுகாதார வழிமுறைகளுடன்) நடத்தினார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி 16 மில்லியன் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment