Advertisment

இலங்கை பிரதமர் ராஜபக்ச ராஜினாமா; கொழும்புவில் வெடித்த வன்முறை!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக் காரர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வன்முறை வெடித்தது. இதையடுத்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sri Lanka Live News,Updates,Latest News,Mahinda Rajapaksa resigns as Prime Minister,Rajapaksa resigned Prime minister,Colombo Attack,Sri Lanka,Financial Problem,Mahinda Rajapaksa resigns as Prime Minister,Unemployment in Sri Lanka,Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa has resigned,Mahinda Rajapaksa resigns as Prime Minister of Sri Lanka,violence erupted in the capital, Colombo,Prime Minister amid a major clash between Mahinda supporters and protesters in Sri Lanka,Supporters of Prime Minister Mahinda Rajapaksa attacked the protesters this morning,இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே,இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்,இலங்கை செய்திகள்,பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சவின் அலுவலகத்திற்கு வெளியே இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் போராட்டக்காரர்களைகோட்டபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 78 பேர் காயமடைந்துள்ளனர் மேலும், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இலங்கை பிரதமர் ராஜபக்ச திங்கள்கிழமை பதவியில் இருந்து விலகினார் - இது தனது இளைய சகோதரரான இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசு, இலங்கை வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகத்திற்கு வெளியே இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், கொழும்புவில் வெடித்த வன்முறையில், குறைந்தது 78 பேர் காயமடைந்தனர். இலங்கையில், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவைத் தவிர, குறைந்தது இரண்டு கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில், நெருக்கடியான அரசாங்கத்தை வழிநடத்தும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய வேண்டும் என விரும்பினார்.

தனது மூத்த சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு ஒப்புக்கொள்வதுடன், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கும், அமைச்சரவையை அமைப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.

76 வயதான மஹிந்த ராஜபக்ச, தனது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்ச்யி இருந்து பதவி விலகுமாறு அழுத்தத்தில் இருந்தர். இருப்பினும், அவர் பதவி விலக வேண்டாம் என்று எதிர் முழக்கம் எழுப்ப அவருடைய ஆதவாளர்களைத் திரட்டினார்.

இலங்கையின் பிரதான உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லாததால், இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவில், பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகக் கோரி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், மைனா கோ காமா மற்றும் கோட்டா கோ காமா போராட்ட இடங்களில், அரசு ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே இன்று ஏற்பட்ட வன்முறை சூழ்நிலையைத் தொடர்ந்து 130 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் நடந்துவரும் இடத்தில், இலங்கை அரசு ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து, திங்கட்கிழமை காலை வன்முறையும் குழப்பமும் ஏற்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ காமா போராட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி முகாமைக் கலைத்தனர்.

இதனால், அங்கே வன்முறை வெடித்ததால், நிலைமையைக் கட்டுப்படுத்த இலங்கை போலீஸ், கலவரத் தடுப்புப் போலீசார், இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய சட்ட அமலாக்கப் பிரிவு படைகள் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுப்படுத்த இலங்கை போலீசார் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினர்.

இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, தலைநகர் கொழும்புக்கு வெளியே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில், சடலமாக மீட்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment