Mahinda Rajapaksa : இலங்கை ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
அதிபர் சிறிசேனா முன்னிலையில் இன்று மாலை ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஆளும் கூட்டணியில் இருந்து அதிபர் சிறிசேனாவின் கட்சி விலகியதை தொடர்ந்து கூட்டணி கலைந்து பதவியை இழந்தார் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.
Mahinda Rajapaksa : இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போது ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், மைத்ரி பால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இணைந்து கூட்டணியாக ஆட்சியை பிடித்தனர். இதில் சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியும் கைப்பற்றினர்.
மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்பு. பதவி பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் சிரிசேனா
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்த கூட்டாட்சியில் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இடம் பெற்றிருந்தது.
October 2018
இந்நிலையில் ரணில் தலைமையிலான அரசுக்கு அளித்தவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அரசில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான மகிந்த அமரவீர வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் கருஜய சூரியாவிடம் எழுத்து மூலமாக கொடுத்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி குறித்து மேலும் விரிவான தகவல்களை பெற இதனை கிளிக் செய்யுங்கள்
இதனையடுத்து பரபரப்பு திருப்பமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இன்று மாலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கை புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே அடுத்த மாதம் 5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அவரது கட்சியினர் அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.
October 2018
ஆனால் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் அதிபரின் முடிவுக்கு இலங்கை அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.