கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மாலா 6 ஆண்டுகளுக்கு பின்பு தனது சொந்த ஊரிற்கு சென்றார்.
மலாலா யூசப்சாய் என்ற 20 வயது பெண் தனது சொந்த நாட்டிற்கு திரும்புவது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. பெண் கல்விக்காக பாடுப்பட்ட இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்தாக்கில் பள்ளி விட்டு வேனில் சென்றுக்கொண்டிருந்த போது, சிறுமி என்றுக் கூட பார்க்காமல் தலிபான் தீவிரவாதிகள் மலாலாவை கண்மூடித்தனமாக சுட்டனர்.
இறந்து விட்டார் என்று நினைத்த போது, அவ்வளவு சீக்கிரமாக இந்த உயிர் போகாது என்று மீண்டு எழுந்தார்.தீவிரவாதிகள் சுட்டதில் அவரின் தலை மற்றும் முகத்தில் குண்டுகள் பாய்ந்தன. பின்பு, அவருக்கு கிரேட் பிரிட்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மனம் தளராக மலாலா ஒரே வாரத்தில் தனது பணியை மீண்டும் துவக்கினார்.
பாகிஸ்தானில் இருக்கும் பெண்கள் பலரும் மலாலாவிற்கு ஆதரவுகள் கரங்களை நீட்டினார். ஆனால் ஆண்களோ பெண் விடுதலைக்கான மேற்கத்திய கலாசாரத்தை மலாலா பரப்புவதாக அவர் மீது தீராத பகையை வளர்த்துக் கொண்டனர்.
பிழைத்து வந்த மலாலா, உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா பெண்கள் கல்விக்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா.
,
A brave girl, @Malala who left the country with closed eyes while critically injured but she is now visiting her beloved country with open eyes & on the top of it she has become more powerful & unstoppable. #MalalaYousafzai #MalalaInPakistan pic.twitter.com/WVzNU0n2f7
— Shad Begum (@ShadBegum) March 29, 2018
இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் மலாலாவையே சேரும். இந்நிலையில் தான், அவருக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தொடருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
Oscars winning Director Sharmeen Obaid Chinoy with best actor US ever produced @Malala. #MalalaYousafzai will definitely win next Oscar for her today's performance. pic.twitter.com/OsHMBIGg9j
— Aftab Afridi (@AftabAfridiPTI) March 29, 2018
பின்பு, சமீபத்தில் மலாலா அளித்த நேர்காணல் ஒன்றில், தனது சொந்த ஊரான ஸ்வாட்டை 'பூமியின் சொர்கம்' என்று குறிப்பிட்டு, தான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதன் அடுத்த நிலையாக மலாலா இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரிற்கு வந்தார்.
,
Oh Brave Brave @Malala You made us cry. ????
— Asma Shirazi (@asmashirazi) March 29, 2018
You are Pride of Pakistan ????????and your cause is bigger. Your country, your people are with you.
Stay Blessed #MalalaYousafzai @MalalaFund @ZiauddinY pic.twitter.com/iu3y1H1ruH
பெண் கல்வியை வலியுறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலாலாவின் வருகையையொட்டி பாகிஸ்தானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
,
The Nobel Peace laureate Malala Yousafzai has returned to #Pakistan after 5 years and being honoured by the Prime Minister of Pakistan at a special ceremony. MoS for MOIB @Marriyum_A was also present on the occasion along with PM's Special advisor Mussadiq Malik.#MalalaYousafzai pic.twitter.com/uYTNSu5ipP
— Govt of Pakistan (@pid_gov) March 29, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.