பாம்புகளின் நண்பனை பாம்புகளே கடித்து கொன்ற கொடூரம்!

கட்டி அணைப்பது, முத்தம் இடுவது என பாம்புகளை ஒரு குழந்தைப் போல் ஜாரின் ஹூசைன் பார்த்து வந்துள்ளார்.

பாம்புகளின் நண்பனாக இருந்த அபு ஜாரின் ஹூசைனை, ராஜ நாகம் ஒன்று கொடூரமாக கடித்துக் கொன்ற சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’பாம்பென்றால் படையும் நடுங்கும்’என்பார்கள், ஆனால், ஹூசைனுக்கு மிகவும் பிடித்த உயிரினம் பாம்புகள் மட்டுமே. பாம்புகளின் காதலன், நண்பன் என இவருக்கு ஏகப்பட்ட பெயர்கள். 33 வயதான ஹூசைன் பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றை பிடித்து பத்திரமாக வனத்தில் விடும் தீயணைப்புத்துறை வீரராக பணிப்புரிந்து வந்தார்.

எவ்வளவு கொடிய விஷமுள்ள பாம்புகள் என்றாலும் அது, ஹூசைனைப் பார்த்தால் அப்படியே பணிந்து விடுமாம். கோலாம்பூரை சுற்றியுள்ள எந்த பகுதியில் பாம்புகள் நுழைந்தாலும், முதல் ஃபோன் கால் ஹூசைனைக்கு தான் வருமாம். அதை பாதுகாப்பாக பிடித்து வந்து உயிரியல்பூங்காவில் விடும் பணியை ஒரு ஹாபி போல் செய்து வந்தார் அவர்.

பாம்புகளுக்கு முத்தமிடுவது, பல் துலக்கி விடுவது, கட்டி அணைப்பது, முத்தம் இடுவது என பாம்புகளை ஒரு குழந்தைப் போல் ஜாரின் ஹூசைன் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வாரம் குடியிருப்பு பகுதி ஒன்றில் கொடிய விஷமுள்ள ராஜநாகம் ஒன்று இருப்பதாக ஹூசைனுக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அவர், அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜநாகம் ஒன்று  ஹூசைனை கொடூரமாக கடித்துள்ளது. அப்போதும், நம்பிக்கை இழக்காத ஹூசைன், தொடர்ந்து அந்த பாம்பை பிடிக்க அவருக்கும் தெரிந்த விதங்களில் முயற்சித்தார். ஆனால், எதற்குமே மடியாத அந்த பாம்பு, ஹூசைனின் நெற்றி பகுதியில் விஷத்தை கக்கியது.

இதனால், மயக்கம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஹூசைன் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் இறப்பு அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹூசனை ஏற்கனவே கொடிய விஷம் உடைய பாம்பு கடித்து, அவர் இரண்டு நாட்கள் கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.

ஹூசைனின் மரணத்திற்கு பிறகு பாம்பை வைத்து அவர் செய்த சாகசங்கள்,  மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பதும், ராஜநாகத்துடன் படுத்து தூங்குவதும், அருகில் வைத்து புத்தகம் படிப்பதும், சாப்பிடுவதும் என அனைத்து  வீடியோக்களும் தற்போது  இணையத்தில்  அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

×Close
×Close