மாலத்தீவில் அவசர நிலை: ராணுவத்தை அனுப்புகிறதா இந்தியா?

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகளை கவனித்து வரும் நஷீத் இந்தியாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகளை கவனித்து வரும் நஷீத் இந்தியாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாலத்தீவில் அவசர நிலை: ராணுவத்தை அனுப்புகிறதா இந்தியா?

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலையைப் பிரகடனம் செய்த நிலையில், மாலத்தீவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

மாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டது.

எனவே அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததுடன், நாடு முழுவதும் 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். இதையடுத்து, அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியது.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். இதையடுத்து, இன்று அதிகாலை மாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி ஹசன் சயீத் உசைனும் கைது செய்யப்பட்டார்.

Advertisment
Advertisements

இதற்கிடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபரான முஹம்மது நஷீத், தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார். அதன்பின், உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு அவர் செல்ல மாலத்தீவு அரசு அனுமதி அளித்தது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவில் நேற்றிரவு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்து நடைபெற்றுவரும் கைது நடவடிக்கைகளை கவனித்து வரும் நஷீத் இந்தியாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அதில், "மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும்.

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தி, அடிப்படை சுதந்திரத்தை பறித்ததுடன் உச்சநீதிமன்றத்தையும்  முடக்கியுள்ள அப்துல்லா யாமீனின் அறிவிப்பு ராணுவ ஆட்சிக்கு இணையாக உள்ளது. இதை மாலத்தீவு மக்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளவோ, கடைபிடிக்கவோ மாட்டார்கள்.

அப்துல்லா யாமீனை நாம் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை மாலத்தீவு மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: