/tamil-ie/media/media_files/uploads/2022/11/maldives-fire.jpg)
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. எரிந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் இருந்து தீ ஏற்பட்டதாக தெரிகிறது. தீயை அணைக்க நான்கு மணி நேரம் எடுத்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
“மாலேயில் ஏற்பட்ட துயரமான தீ விபத்தில் இந்திய நாட்டவர்கள் உட்பட பலர் உயிர் இழந்துள்ளனர், நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். நாங்கள் மாலத்தீவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்” என்று இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
உதவிக்கு தூதரகத்தை +9607361452 அல்லது +9607790701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், அருகிலுள்ள மைதானத்தில் வெளியேற்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது.
"மாலேயில் தீயினால் இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மாஃபான்னு ஸ்டேடியத்தில் NDMA ஒரு வெளியேற்ற மையத்தை நிறுவியுள்ளது. நிவாரண உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று NDMA ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.