“மாலத்தீவும் சீனாவும் வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் வகையில், மாலத்தீவு குடியரசிற்கு இலவசமாக ராணுவ உதவிகளை சீனா வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன” என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Maldives President Muizzu: No Indian troops, in uniform or civilian clothes, after May 10
மாலத்தீவு அதிபர் முய்ஸு கடந்த ஆண்டு இந்திய-விரோத நிலைப்பாட்டில் ஆட்சியைப் பிடித்தார். பதவியேற்ற சில மணிநேரங்களில் இந்தியப் பெருங்கடலில் ராஜதந்திர ரீதியாக அமைந்துள்ள மாலத்தீவுகளில் இருந்து தனது படையை அகற்றுமாறு இந்தியாவிடம் கோரினார்.
இந்திய ராணுவ வீரர்களின் முதல் தொகுதியை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவுக்கு சில நாட்களுக்கு முன்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, மே 10-ம் தேதிக்குப் பிறகு சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ எந்த இந்திய ராணுவ வீரர்களும் மாலத்தீவு நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று கூறினார்.
“மாலத்தீவு நாட்டில் மே 10-ம் தேதி இந்தியப் படைகள் இருக்காது. சீருடையில் மட்டும் இல்லை, சிவில் உடையிலும் இருக்கமாட்டார்கள். இந்திய ராணுவம் எந்த வகையிலும் ஆடை அணிந்து இந்த நாட்டில் இருக்கமாட்டாரக்ள் இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்” என்று முய்சு கூறியதாக மாலத்தீவு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் சீருடை அணியாத ராணுவ வீரர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்கு அவர் பதிலளித்தார்.
இந்த செய்தியின்படி, பா அடோல் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தின் போது எய்தாஃபுஷியின் குடியிருப்பு சமூகத்தினரிடம் திங்கள்கிழமை உரையாற்றும்போது, முய்ஸு கூறினார்: “இந்த மக்கள் (இந்திய இராணுவம்) வெளியேறவில்லை, அவர்கள் தங்கள் சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிக்கொண்டு திரும்பி வருகிறார்கள்… நம் இதயங்களில் சந்தேகங்களைத் தூண்டி, பொய்களைப் பரப்பும் இதுபோன்ற எண்ணங்களைத் தூண்டாதீர்கள்.” என்று கூறினார்.
இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின் முதல் குழு மாலத்தீவை அடைந்து அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றைப் பொறுப்பேற்கச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, முய்ஸுவின் இந்த அறிக்கை வந்துள்ளது. “மார்ச் 10-ம் தேதிக்குள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டிய முதல் தொகுதி இந்திய இராணுவ வீரர்களுக்கு பதிலாக அவர்கள் மாற்றப்படுவார்கள்.” என்று கூறினார்.
மாலத்தீவில் நிலைகொண்டுள்ள 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை மே 10-ஆம் தேதிக்குள் இந்தியா வெளியேற்றுவதாக பிப்ரவரி 2-ம் தேதி இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அட்டு நகரில் ஹெலிகாப்டர்களை இயக்கும் இந்திய ராணுவ வீரர்கள் முதலில் வெளியேறும்போது, ஹனிமாதூ, ஹா தாலு அடோல் மற்றும் கத்தூ, லாமு அடோல் ஆகிய இடங்களில் இருக்கும் ராணுவ வீரர்களும் மே 10-ம் தேதிக்கு முன்னதாக வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் குடிமக்களின் முதல் குழு, நாட்டின் தெற்கே உள்ள அட்டூவில் ஹெலிகாப்டரை இயக்கும் பொறுப்பை ஏற்கும் என்று கூறியது.
முன்னதாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) மாலத்தீவில் உள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் தற்போதைய பணியாளர்களுக்கு பதிலாக திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்களால்" இயக்கப்படும் என்று கூறியது.
நவம்பர் 2023-ல் ஆட்சிக்கு வந்தவுடன், சீனாவுக்கு ஆதரவாகக் இருப்பதாகக் கருதப்படும் முய்ஸு, மாலத்தீவு நாட்டிலிருந்து தனது ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார். ‘இந்தியா அவுட்’ என்ற முழகத்தில் அந்நாட்டு தேர்தலில் தற்போதைய இப்ராஹிம் முகமது சோலியை முய்ஸு தோற்கடித்தார்.
“மாலத் தீவு நாடும் சீனாவும் வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் வகையில், மாலத்தீவு குடியரசிற்கு சீனாவின் ராணுவ உதவியை இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது” என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“