/tamil-ie/media/media_files/uploads/2020/04/EUJ23JVXYAAN60s.jpg)
Math teacher solving doubts of a student at her house porch
Math teacher solving doubts of a student at her house porch : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று உலக நாடுகள் அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என எதுவும் இயங்கவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து எவ்வாறு சமாளிப்பது என்று தான் யாருக்கும் புரியவில்லை. குழந்தைகள் பலரும் புத்தகங்களை படிக்கவும், விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஒருவருக்கு கணக்கில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய சந்தேகத்தை தன்னுடைய ஆசிரியருக்கு மின்னஞ்சல் செய்து வைத்துள்ளார்.
My 6th grader emailed her math teacher for some help, so he came over & worked through the problem with her on our front porch. @Chriswaba9 , our neighbor, MMS teacher & MHS Wrestling Coach. #KidsFirst@MadisonMSNews@MarkOsports@dakotasportsnow@dakotanews_now@stwalter20pic.twitter.com/aniqt2goPB
— Josh Anderson (@DakSt8Football) March 27, 2020
அந்த மின்னஞ்சலை படித்த அவருடைய ஆசிரியர், ஒரு குட்டி போர்டை எடுத்துக் கொண்டு மாணவியின் வீட்டு வாசலில் நின்று அவரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார். மாணவியின் விடாமுயற்சியும், ஆசிரியரின் இந்த அர்பணிப்பையும் பார்த்து அக்கம் பக்கத்தார் வியந்து பாராட்டியுள்ளனர்.
மேலும் படிக்க :தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.