Advertisment

மொரிசியஸில் தரை தட்டிய கப்பல்... எண்ணெய்க் கசிவால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து!

இது போன்ற பிரச்சனைகளை கையாள சர்வதேச அளவில் தொழில்நுட்பம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mauritius oil spill: Locals scramble to contain environmental damage

Mauritius oil spill :  இந்திய பெருங்கடலில் பவளப் பாறைகளால் சூழப்பட்டிருக்கும் தீவுகளில் ஒன்று மொரிசீயஸ். எம்.வி. வகஷியோ எனப்படும் சரக்கு கப்பல் ஒன்று கரையை தட்டியது. ஜூலை 25ம் தேதி விபத்திற்குள்ளான அந்த கப்பலில் சுமார் 4000 டன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 1000 டன்னிற்கும் மேலாக எண்ணெய் கடலில் பரவியுள்ளதால் சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் நிலையை எட்டியுள்ளது.

Advertisment

Mauritius oil spill: Locals scramble to contain environmental damage

அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் தங்களால் இயன்ற அளவு கடலில் இருந்து எண்ணெய்யை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாக்குகளில் வைக்கோலை வைத்து எண்ணெய் மேலும் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் கடற்கரை வரை பரவியிருக்கும் எண்ணெய்ய்யை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற பிரச்சனைகளை கையாள சர்வதேச அளவில் தொழில்நுட்பம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  எண்ணூர் விபத்தில் வாலிகளை வைத்து எண்ணெய்யை நீக்கியது போன்றே இங்கும் பலரும் தங்களால் இயன்ற அளவு எண்ணெய்யை நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Mauritius oil spill: Locals scramble to contain environmental damage

மொரிசியஸ் தீவை சுற்றி சூழ்ந்திருக்கும் இந்த எண்ணெய்யை அகற்றும் பணியில் மொரிசியஸ் அரசிற்கு உதவும் நோக்கில் ஃப்ரான்ஸ் மாசு கட்டுப்பாட்டு கருவிகள் அடங்கிய ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது. ஞாயிற்றுகிழமை அன்று 6 பேர் அடங்கிய குழு ஒன்றை ஜப்பான் மொரிசியஸிற்கு அனுப்பியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment