யஷீ, கட்டுரையாளர்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதம் மெக்காவில் உள்ள பெரிய மசூதி இஸ்லாமிய போராளிகளால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த இரண்டு வார முற்றுகை நிகழ்வுகள் இன்னும் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முரண்பாடான கருத்துகள் ஏராளமாக உள்ளன. இந்த தாக்குதல் சவுதி அரேபியாவையும், மத்திய கிழக்கின் பெரும்பகுதியையும் என்றென்றைக்கும் மாற்றியது. அது இன்றும் உலகை தொடர்ந்து பாதிக்கிறது.
அரசர் அல் சௌத் குடும்பத்தின் நவீனமயமாக்கல் வழிகளை விரும்பாத ஜுஹைமான் அல்-ஓடாய்பி என்பவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அது இஸ்லாத்தின் புனித தளத்தில் வன்முறை மற்றும் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது. மேலும், இது சவுதி அரசு வீரரை கடுமையான இஸ்லாம் நோக்கி நெருங்கச் செய்தது.
இந்த தாக்குதலில் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பதில் 1000 பேர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், அதிகாரப் பூர்வமாக 250 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. போராளிகளை வெளியேற்ற சவுதி அரேபியா வெளிநாட்டு உதவியை நாடியது.
நவம்பர் 20, 1979 இல் நடந்தது என்ன?
இஸ்லாமிய நாட்காட்டியின்படி அது முஹர்ரம் 1, 1400 ஆண்டு ஆகும். அதிகாலை 5:30 மணியளவில், யாத்ரீகர்கள், மெக்காவின் புனித மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். தோட்டாக்களின் சத்தம் கெட்டபோது மசூதியின் ஒலிபெருக்கிகள் மஹ்தியின் வருகையை அறிவித்தன. மஹ்தி தீர்ப்பு நாளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றவிருக்கும் மீட்பர் ஆவார்.
மைக்ரோஃபோன்கள் அல்-ஒடாய்பி மற்றும் அவரது ஆதரவாளர்களால் கையகப்படுத்தப்பட்டன. மைக்ரோஃபோன்கள் அல்-ஒடாய்பி மற்றும் அவரது ஆதரவாளர்களால் கையகப்படுத்தப்பட்டன. மீட்பர் முஹம்மது அல் கஹ்தானி, அவரது மைத்துனர். சுமார் 100,000 யாத்ரீகர்களை பணயக்கைதிகளாக்கி முற்றுகை15 நாட்கள் நீடித்ததில் இரத்தக்களரி, மரணங்களுக்குப் பிறகு சவூதி அரசு படைகள் இறுதியாக மசூதியை திரும்ப மீட்டது.
பெட்ரோடோலர்களைக் கொண்டு வளர்ந்த சவுதி அரேபியா மேற்கத்திய உலகத்துடன் பழகிக் கொண்டிருந்த காலம் அது. பெண்கள் தொழிலாளர்களாக இருந்தனர். டிவி பல ஆண்டுகளுக்கு முன்பு சவுதிக்குள் வந்திருந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் இங்கு வேலை செய்து சம்பாதித்து வந்தனர். இஸ்லாத்தின் தூய்மையான பாதையில் இருந்து விலகிச் செல்வதை சவுதி மக்களில் ஒரு பகுதியினர் விரும்பவில்லை.
அண்டை நாடான ஈரானில், மதச்சார்பான அரசாங்கம் இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ஷியைட் மதச்சார்பற்ற அரசாங்கம் சமீபத்தில் பொறுப்பேற்றது.
அல் ஒடாய்பி
அல்-ஒடாய்பி ஒரு முக்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். சவுதி இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தார். இஸ்லாத்தின் புனிதமான தளத்தின் பாதுகாவலர்களாக இருந்த சவுதி அரச குடும்பம் உலக ஆடம்பரங்களில் மூழ்கி மிகவும் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது என்று அவர் நம்பினார். அல்-ஒடாய்பிக்கு நாட்டை மீண்டும் நீதியான இஸ்லாமிய பாதைக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி அல் சவுத்ஸைத் தூக்கியெறிவதுதான்.
அவரது போராளிகள் குழு புனித மசூதியைத் தாக்கியபோது, அரசு தயாராக இல்லை. வெளி உலகத்துடனான தொடர்பு வழிகள் விரைவாக துண்டிக்கப்பட்டன. மசூதியில் இரத்தக்களரி என்பது மிக உயர்ந்த நிலையைக் கேவலப்படுத்துவது என்பதால் இராணுவ வீரர்கள் செய்ய விரும்பாத ஒன்று. உலமாக்களுடன் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் எதிர் தாக்குதலுக்கு அவர்களின் அனுமதி கோரப்பட்டது.
இருப்பினும், உள்ளே மறைந்திருந்த போராளிகளை வெளியேற்றுவது சவாலானதாக இருந்தது.
அல்-ஒடாய்பியைப் பின்தொடர்ந்தவர்களில் பலர் பயிற்சி பெற்ற வீரர்கள். தாக்குதல் நடந்த நாளில் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் சிறிது வெடிமருந்துகள் சவப்பெட்டிகளில் மசூதிக்குள் கடத்தப்பட்டன. அப்போது மக்கள் பெரும்பாலும் இறந்தவர்களை இறை வாழ்த்துக்காக உள்ளே எடுத்துச் சென்றார்கள். ஆனால், அதற்கு சில வாரங்களுக்கு முன்னர், சில செய்திகளின்படி அவர்கள் அந்த இடத்தில் காவலர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர். ஏனென்றால், பல நிலவறைகளைக் கொண்ட மசூதியின் தள அமைப்பு அவர்களுக்குத் தெரியும்.
சவுதி அரசுக்கு மசூதியின் புளு பிரிண்ட் பின்லேடன் நிறுவனம் வழங்கியது. அதுதான் உள்ளே கட்டுமான பணிகளை மேற்கொண்டது. ஒரு பிரெஞ்சு உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படை கமாண்டோக்கள், தேசிய ஜென்டர்மேரி தலையீட்டுக் குழு (ஜி.ஐ.ஜி.என்) உள்ளே நுழைந்தனர். புகை மண்டலமான மசூதி வளாகம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.
சர்வதேச எதிர்வினை
ஆரம்பத்தில், இந்த தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டதாக நம்பப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக கூறி அயதுல்லா கோமெய்னி இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். இதனால் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் எரிக்கப்பட்டு, நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
முற்றுகை தொடங்கிய தருணத்தில் சவூதி அரேபியா தன்னை மூடிக்கொண்டது. செய்தி ஊடகங்கள் அல்லது முஸ்லிமல்லாதவர்கள் கூட அரசை அணுகவில்லை. தாக்குதலின் பல விவரங்கள் அப்போது தெளிவாக இல்லை என்பதை உறுதிசெய்தது. அவை இப்போதும் தெளிவாக இல்லை.
பின்விளைவு
பிரச்னைகள் அடங்கிய பிறகு இரண்டு விஷயங்கள் தெளிவாக இருந்தன. சவுதியா அரேபியா இஸ்லாமியத்தை கடுமையாக்கும் பாதையில் இருந்தது. ஈரானுடனான போட்டி அது மற்றொரு மத நாடாக ஆழமடைந்தது.
சவூதி அரச குடும்பம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த ஒரே வழி, இஸ்லாமிய நம்பிக்கையின் முன்னணி பாதுகாவலராக தன்னை நிலைநிறுத்துவதே என்பதை உணர்ந்தது. அப்போதிலிருந்து ஆட்சியாளர்கள் உலமாக்களை ஆட்சிக்குள் இணைத்தனர். சமூக சீர்திருத்தங்கள் குறைக்கப்பட்டது. இஸ்லாமிய கலாச்சார சட்டம் வாழ்க்கையில் பெரும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இஸ்லாத்தின் கடுமையான அடையாளத்தை வெளியில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளது.
சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 1979 க்குப் பின் வேரூன்றிய தீவிரவாதத்திலிருந்து விலகி, நாடு அதன் மிதமான கடந்த காலத்திற்குத் திரும்பும் என்று கூறி வருகிறார்.
இருப்பினும், மத அதிகாரம், அரச அதிகாரம், அரசியல் இஸ்லாத்தின் தீவிர அடையாளம் மற்றும் கடந்த 40 ஆண்டுகளில் சவூதி அரேபியா போற்றிய வஹாபி சித்தாந்தத்தின் பரவல் ஆகியவை உலகின் பெரும்பகுதியை தொடர்ந்து பாதித்துவருகிறது.