இந்தனோசியாவில் இரவு 9 மணிக்கு மேல் ஹோட்டலுக்கு தனியாக வரும் பெண்களுக்கு உணவு கிடையாது என்று மாவட்ட நிர்வாக புதிய உத்தரவு பிற்பித்துள்ளது.
கட்டுப்பாட்டில் பெண்கள்:
இந்தனோசியாவில் உள்ள பிர்யூன் மாவட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் தற்போது வரை அமலில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்த பகுதியில் பெண்கள் உறவினர் அல்லாதவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த கூடாது, வெளியில் சேர்ந்து செல்ல கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாவட்ட நிர்வாகம் தற்போது புதிய உத்தரவு ஒன்றையும் பிற்பித்துள்ளது. அதாவது, இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்பதே அந்த உத்தரவு.
இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை சட்டமாக்கும் தீவிர முயற்சியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ,முயற்சித்து வருகிறது.