/tamil-ie/media/media_files/uploads/2020/08/1ad2f66e-cd8b-48b0-91d3-9df81fd4f9d1.jpg)
Mike Pence interrupts Kamala Harris in debate, she says, "Mr. Vice President, I'm speaking" : இந்திய பூர்வீகத்தை கொண்ட கமலா ஹாரீஸ் இம்முறை அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவர்கள் இருவருக்கும் ஒரே ஒரு விவாத மேடை மட்டுமே. நேற்று நடைபெற்ற இந்த விவாத்தில் இவ்விருவரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
கமலா ஹாரீஸ் பேசிக் கொண்டிருக்கும் போது இடையே மைக் பென்ஸ் பேச துவங்கினார். அப்போது கமலா ஹாரீஸ், நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். இந்த உரையை முடிக்க விடுங்கள் என்று கூறியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Kamala Harris responds to Pence's false claim that Biden will raise taxes "on day one" of his presidency: "I think this is supposed to be a debate based on fact and truth."
When Pence interrupts, she says, "Mr. Vice President, I'm speaking" #VPdebatehttps://t.co/78k94KOfNVpic.twitter.com/Ibi4lPeLg7
— CBS News (@CBSNews) October 8, 2020
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே வரிகளை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசிய மைக்கிற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அவரை இடை நிறுத்தும் விதமாக பென்ஸ் பேசினார். ஆனால் “ஒரு வாதம் உண்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். தற்போது அவர் வரி உயர்த்துதல் தொடர்பான எந்த முடிவையும் எட்டவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார் கமலா ஹாரீஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.