/tamil-ie/media/media_files/uploads/2018/10/meng-interpol-759.jpg)
இண்டர்போல் தலைமை அதிகாரி மாயம்
இண்டர்போல் தலைமை அதிகாரி மாயம் : சர்வதேச காவல் அமைப்பான இண்டெர்போலின் தலைவர் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மெங் ஹோங்வெய்.
64 வயதான அவர், சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பான இண்டெர்போலின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் முதல் சீனர் ஆவார். பிரான்ஸில் வசித்து வரும் அவர் கடந்த வெள்ளிக் கிழமையன்று ஃபிரான்சில் இருந்து சீனா வந்திருக்கிறார்.
தன்னுடைய மனைவியிடன் எங்கே செல்கிறேன் என்று சொல்லாமல் அவர் சீனாவிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய கணவரைக் காணவில்லை என்று ஃப்ரெஞ்ச் காவல் துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இண்டர்போல் தலைமை அதிகாரி மாயம் : சீனாவில் கைது செய்யப்பட்டாரா ?
வெள்ளியன்று காணமல் போன அவரை இண்டெர்போல் தேடி வந்த நிலையில் அவர் சீனா வந்தடைந்தவுடன் சீன காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. எதற்காக கைது செய்யப்பட்டார், எதற்காக விசாரணை நடைபெறுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என ஹாங்க் காங்கினைச் சேர்ந்த ஊடகவியல் துறை செய்தி வெளியிட்டது.
இண்டெர்போலிடம் அதிகாரிகள் “சீனா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டிற்கு இடைப்பட்ட விவகாரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீனாவின் சட்டம் “ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரைப் பற்றிய தகவல்களை அவரின் குடும்பத்தாருக்கோ, அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கோ தெரிவிக்க வேண்டும்”. ஆனால் இது குறித்து சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகமோ வெளியுறவுத் துறை அமைச்சகமோ எந்த பதிலும் சொல்லவில்லை.
To read this article in English
மெங்கினை ஃபிரான்ஸில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி அன்று பார்த்தது என அவரின் மனைவி தகவல் அளித்துள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் அவர் சீனா வந்தடைந்தார். ஆனால் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.