/tamil-ie/media/media_files/uploads/2018/01/482BF81600000578-5273035-image-a-33_1516064598146.jpg)
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகவும், தன் தாய் தந்தையருக்கு வீடு வாங்குவதற்காகவும், இத்தாலியை சேர்ந்த 18 வயது மாடல் ஒருவர் இணையத்தளத்தில் தன்னையே ஏலம் விட்டுள்ளார். அதில், ஏற்கனவே, சுமார் 8 கோடி ரூபாய் வரை அவருக்கு விலை பேசப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த நிகோல் தன்னுடைய படிப்புக்காகவும், தன் தங்கையின் படிப்புக்காகவும், பெற்றோருக்கு வீடு வாங்கவும் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து நிகோல் தெரிவித்ததாவது, “எனக்கு 16 வயது இருக்கும்போது என்னுடைய கன்னித்தன்மையை நான் விலைமதிப்பற்றதாக நினைத்திருந்தேன். அப்போது என்னைவிட கொஞ்சம் வயது மூத்தவருடன் உறவில் இருந்தேன். ஆனால், நான் யாரை காதலித்து, வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்வோமோ அவருடன் தான் முதன்முறை பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தேன்”, என கூறினார்.
“எனக்கு நல்ல கல்வி வேண்டும். அதற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்காக இணையத்தில் சிலவற்றை தேடினேன். அப்போது, பெண்கள் தங்களையே விற்கும் சில இணையத்தள விளம்பரங்களை கண்டேன். அதன்மூலம், அப்பெண்கள், நிறைய பணம் ஈட்டியுள்ளனர். அதனால், 18 வயதில் நாமும் அதுபோல் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தேன்.”, என கூறுகிறார் நிகோல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.