Advertisment

இந்தியா - சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து

Modi-Xi summit, Here is how Chinese media covered: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi xi summit, modi xi meeting in chennai, china news on modi xi meeting, how covered chinese midea,மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, சீன ஊடகங்கள், china news reports on xi in india, xi in india, india china summit,

modi xi summit, modi xi meeting in chennai, china news on modi xi meeting, how covered chinese midea,மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, சீன ஊடகங்கள், china news reports on xi in india, xi in india, india china summit,

Modi-Xi summit, Here is how Chinese media covered: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

உச்சிமாநாட்டின் முதல் நாளில், மோடியும் ஜி ஜின்பிங்கும் மகாபலிபுரத்தில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கம்பீரமான நினைவுச்சின்னங்களை பார்வையிட்டனர். பின்னர், கலாச்சார கலசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாடி பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டனர்.

இரண்டாவது நாளில், தாஜ் ஃபிஷர்மேன் கோவ்வில் உள்ள டேங்கோ ஹாலில் மோடி ஜி ஜின்பிங்கை வரவேற்றார். அங்கு இருவரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை ‘சென்னை பார்வை’ என்று அழைத்த மோடி, உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய ஆரம்பம் என்றார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து இதயத்தோடு இதயம் விவாதம் நடத்தி இருப்பதாக ஜி ஜின்பிங் கூறினார்.

மகாபலிபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங் உச்சி மாநாட்டை சீன ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன?

சீனா டெய்லி

இந்தியா மற்றும் சீனாவின் “பண்டைய இணைப்புகள்” பற்றி சீனா டெய்லியில் ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த சந்திப்பு நடைபெறும் இடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இந்திய அதிகாரிகள் முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளின் கதைகளுக்கு புத்துயிர் அளிக்க புது டெல்லி விரும்புகிறது என்று கூறியுள்ளது. இது மாறிவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைமை” என்று அதில் கூறியுள்ளது.

இடத்தை தேர்வு செய்வது “தெற்காசிய நாட்டில் சீன முதலீட்டிற்கான பயன்படுத்தப்படாத திறனை எடுத்துக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

குளோபல் டைம்ஸ்

குளோபல் டைம்ஸின் தலையங்கம் மகாபலிபுரம் கூட்டத்தை “இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடுகளில் ஒன்று” என்று அழைத்தது, மேலும் இது “சீனா-இந்தியா உறவுகளின் அடுத்த கட்டத்திற்கான தொனியையும் திசையையும் அமைக்கும். அதே நேரத்தில் தற்போதைய உலகத்திற்கு ஸ்திரத்தன்மையையும் நேர்மறை நிச்சயமற்ற ஆற்றலையும் வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த தலையங்கம் “இரு தரப்பிலிருந்தும் தலைவர்களால் வழிநடத்தப்படுவது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், எதிர்காலத்தில் சர்வதேச உறவுகளை வரையறுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.

குளோபல் டைம்ஸ் இந்த சந்திப்பு தொடர்பாக பல செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றில், சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பரிமாற்றங்களின் நீண்ட வரலாற்றை ஜி ஜின்பிங் நினைவு கூர்ந்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளது. அதில் “பண்டைய சில்க் சாலையில் சரக்குகளுக்கான கடல் போக்குவரத்து மையமான தமிழகம், சீனாவுடனான பரிமாற்றங்களின் நீண்ட வரலாற்றையும், பண்டைய காலங்களிலிருந்து கடல் வர்த்தகத்தில் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது” என்று ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனத்தின் ஒரு வீடியோ தலைப்பில், “இந்திய மக்கள் நான் சீனாவை நேசிக்கிறேன்” என்று கூச்சலிடுகிறார்கள். அதில் மாணவர்கள் ஜி ஜின்பிங்கை நாட்டிற்கு வரவேற்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

சின்ஹுவா செய்தி

சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா நியூஸ், மோடி - ஜி ஜின்பிங் உச்சி மாநாட்டில் இரண்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில், சீனா மற்றும் இந்தியக் கொடிகளை அசைத்து வீதிகளில் வரிசையாக “அனைத்து தரப்பு மக்களும்” சீன அதிபரை இந்தியாவுக்கு வரவேற்றதாகக் கூறியுள்ளது.

சவுத் சீன மார்னிங் போஸ்ட்

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் முறைசாரா உச்சிமாநாட்டை “ஏராளமான புகைப்பட வாய்ப்புகள் மற்றும் சூடான வெளிச்சம்” கொண்டது என்று விவரித்துள்ளது. பிரதமர் மோடி “இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் உள்ள சுருக்கங்களைத் தீர்ப்பதற்கு தனிப்பட்ட கெமிஸ்ட்ரியை பயன்படுத்துகிறார்” என்று அது கூறியுள்ளது.

ஒருவருக்கொருவர் இரவு உணவு ஒரு மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த செய்தி குறிப்பிட்டது. ஆனால், மோடி மற்றும் ஜி ஜின்பிங் இரண்டரை மணி நேரம் செலவிட்டனர்.

Chennai India Narendra Modi China Xi Jinping
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment