மலேசியாவில் மாதம் ஒரு நூலை வெளியிட மலேசிய எழுத்தாளர் சங்கமும், மலேசிய இந்தியன் காங்கிரஸும் சேர்ந்து திட்டமிட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் நூல் வெளியீடுகள் வித்தியாசமானவை. பிரமுகர்கள் முதல் நூலை கணிசமான தொகை கொடுத்து வாங்குவார்கள்.
இந்நிலையில், இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரசின் ஆதரவோடு மாதம் ஓர் எழுத்தாளரின் நூலை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தி வருகிறது.
ஒவ்வொரு நூலுக்கும் ம.இ.கா.மூலம், அதன் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் ஐயாயிரம் வெள்ளி(75,000.00 ரூபாய்) கொடுக்க, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.
அண்மையில் 80 வயது நிறைவடைந்த மக்கள் எழுத்தாளர் அ.கந்தனின் ’உரிமைப் போராட்டம் எனும்’ நூல் வெளியீடப்பட்டது.
கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோரும் கலந்து கணிசமான் தொகை கொடுத்து நூல் பெற்றனர்.