Mount Everest became visible in Kathmandu after coronavirus lockdown imposed
Mount Everest became visible in Kathmandu after coronavirus lockdown imposed : கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது. ஊரெல்லாம் மக்கள் நடமாட்டம் குறைந்து, தொழிற்சாலைகள் எல்லாம் செயல்படாமல், மாசு ஏற்படாமல் இருக்க உலகம் தன்னுடைய நீண்ட நாள் காயங்களை ஆற்றிக் கொள்ள இந்த நாட்களை பயன்படுத்தி வருகிறது.
ஏற்கனவே கங்கை நதி தூய்மை அடைய துவங்கியுள்ளது. பஞ்சாபில் இருந்து பார்த்தாலும் தொலை தூரத்தில் இருக்கும் இமயமலைத் தொடர்கள் தெரிய துவங்கின. வெகு நாட்களுக்கு பிறகு வெனிஸ் நகர் நதிகளில் வாத்துகளும், மீன்களும் வலம் வர ஆரம்பித்துள்ளன. தற்போது நேபாளின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்து உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை தெளிவாக பார்க்க முடிகிறது.
Advertisment
Advertisement
காற்று மாசு மிகவும் குறைந்துள்ளாதால் 200 கி.மீ-க்கு அப்பால் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை மிகவும் துல்லியமாக பார்த்து ரசிக்க முடிகிறது என்று காத்மாண்டு வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மே மாதம் 10ம் தேதி எவரெஸ் மலைச் சிகரத்தை 200 கி.மீக்கு அப்பால் இருக்கும் சோபர் கிராமத்தில் இருந்து காண முடிந்துள்ளது. எவரெஸ்ட் சிகரம் காங்க் நச்சுகோ மற்றும் சோபட்சே மலை சிகரங்களுக்கு பின்னால் கம்பீரமாக, தெளிவாக தெரியும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கௌதமின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பிகாரில் இருந்தும், உ.பி.யில் இருந்தும் இமயமலை தொடர்களை ரசிக்க முடியும் அளவிற்கு காற்றின் தரம் உயர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “