/tamil-ie/media/media_files/uploads/2021/04/sri-lanka2.jpg)
2021 ஆண்டிற்கான ’Mrs.Sri Lanka’ நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2021 ஆண்டிற்கான பட்டத்தை வென்ற அழகு ராணி புஷ்பிகா டி செல்வா, அவரிடமிருந்து கிரீடம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து கண்ணீருடன் மேடையை விட்டு வெளியேறினார்.
நிகழ்ச்சியில் புஷ்பிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கிரீடம் அவருக்கு வழங்கப்பட்டது. உடனே, 2019 ஆண்டில் பட்டத்தை வென்ற கரோலின் ஜூரி, புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை பறித்து, அவர் விவாகரத்தானவர் என்பதால் இந்த கௌரவத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார்.
மேலும், ஜூரி பார்வையாளர்களிடம், திருமணம் செய்தவர்களுக்கே பட்டம், விவாகரத்து செய்தவர்களுக்கு அல்ல என்று விதி உள்ளது. எனவே கிரீடம் முதல் ரன்னர் அப்-க்கு செல்கிறது. என்று கூறினார்.
அதன் பிறகு ஜூரி முதல் ரன்னர் அப் தலையில் கிரீடத்தை வைத்ததால் புஷ்பிகா கண்ணீருடன் மேடையிலிருந்து வெளியேறினார்.
ஆனால் புஷ்பிகா விவாகரத்து செய்யவில்லை என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியதுடன் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
’Mrs.Sri Lanka’ அமைப்பின் தேசிய இயக்குனர் சந்திமல் ஜெயசிங்க பிபிசியிடம், கீரிடம் புஷ்பிகாவுக்கு கிரீடம் திருப்பி தரப்படும் என்று கூறினார்.
கரோலின் ஜூரி மேடையில் நடந்துக்கொண்டது தவறு அவர் மீது ’Mrs.World’ அமைப்பு ஏற்கனவே இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று ஜெய்சிங்கே கூறினார். மேலும், புஷ்பிகா அவரது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்யவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே பேஸ்புக் பதிவில் புஷ்பிகா தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சட்டநடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புஷ்பிகா தனது வெற்றியை தாய்மார்களுக்கு அர்ப்பணித்தார். இலங்கையில் இன்று என்னைப் போன்ற சிங்கிள் அம்மாக்கள் நிறைய உள்ளனர். . தங்கள் குழந்தைகளை தனியாக வளர்க்க துன்பப்படுகிற சிங்கிள் அம்மாக்களுக்கு இந்த கிரீடம் அர்பணிக்கப்படுகிறது என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கரோலின் ஜூரி மற்றும் ஜெயசிங்க இருவரையும் இலங்கை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.