சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. அங்கு ‘முன்னேறு வாலிபா’ என தொடங்கும் தமிழ் பாடல் தேசிய கீதமாக உள்ளது. “முன்னேறு வாலிபா, முன்னேறி என்றும் தொடுவாய் நோக்குவாய்’ என்ற இந்த பாடல் கடந்த 1967 முதல் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், அந்த நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் பாடப்பட்டு வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ தமிழர் ஒருவரால் ‘சிங்கே நாடு’ என்ற பாடல் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மெட்லி பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அழகான இசைக் கோர்வையுடன், 6 கலைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்கள். இதில், முன்னேறு வாலிபா மற்றும் சிங்கை நாடு ஆகிய இரண்டு பாடல்களையும் கப்பேலா இசைக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “இசை எவ்வாறு மொழி, இனம், மதங்களை தாண்டி ரசிக்கவும், ஒன்றிணைய வைக்கிறது என்று புகழ்ந்துள்ளார்.
Enjoyed this medley of 2 Tamil songs by local a cappella group 1023. A gd example of how music transcends language, race & religion! – LHL https://t.co/ia9clPnOvE
— Lee Hsien Loong (@leehsienloong) July 26, 2018