செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா

Perseverance Rover : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம் தனது முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

Perseverance Rover : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம் அனுப்பியது.  25 கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் களமிறங்கும் போது இந்த கேமரா இயங்க தொடங்கும் அளவுக்கு  பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 7 மாத பயணத்திற்கு பின் தற்போது ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.

தரையிறங்கியவுடன் தனது பணியை தொடங்கிய ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் தனித்துவமான விவரங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் புகைப்படங்களை தெளிவாக எடுக்க அதன் மேலே ஸ்கை கிரேன் பொருத்தப்பட்டுள்ளது.  தற்போது ரோவர் அனுப்பிய புகைப்படங்களை வெளியிட்டு  நாசா செய்தி மாநாட்டில் பேசிய விமான அமைப்பு பொறியாளர் ஆரோன் ஸ்டெஹுரா கூறுகையில்,

இது நாம் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று. இந்த புகைப்படங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது, இது ஒரு வெற்றியின் உணர்வுதான், உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புகைப்படங்களை 1969 இல் அப்பல்லோ 11 இன் புகைப்படத்துடன் ஒப்பிடலாம், நாசா விண்வெளி வீரர்களின் விடாமுயற்சி பலன் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் ஆடம் ஸ்டெல்ட்ஸ்னர், கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் உளன்ள ரோவர் விண்கலம்,  அடுத்த சில நாட்களில் மேலும் சில புகைப்படங்கள் மற்றும் தனித்துவமான ஆடியோ பதிவுகளை வெளியிடும் என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளின் விடாமுயற்சியின் காரணமாக 7 மாதங்கள் தொடர் பயணம் செய்த ரோவர் விண்கலம் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. தொடர்ந்து ரோவர் ஒரு பழங்கால நதி டெல்டாவுக்கு அருகில் தொட்டு, பண்டைய வாழ்க்கையின் தடயங்களைத் தேடும் என்றும் பூமிக்கு திரும்புவதற்கான மிக முக்கியமான பாறை மாதிரிகளை சேகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nasa releases first images of mars perseverance rover

Next Story
”தடுப்பூசிகளை பதுக்க வேண்டாம்; உலக தேவைகளுக்கு கொடுங்கள்” ஐ.நாவில் இந்தியாStop vaccine nationalism, encourage internationalism: India at UNSC
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express