விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்: விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரின் ஐ.எஸ்.எஸ் மிஷன் நீண்டதால், அவர்கள் விண்வெளியில் 286 நாட்கள் இருந்திருப்பார்கள். ஆனால், இது அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ விண்வெளியில் செலவிட்ட நாட்களை விட குறைவானது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரின் ஐ.எஸ்.எஸ் மிஷன் நீண்டதால், அவர்கள் விண்வெளியில் 286 நாட்கள் இருந்திருப்பார்கள். ஆனால், இது அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ விண்வெளியில் செலவிட்ட நாட்களை விட குறைவானது.

author-image
WebDesk
New Update
Sunita will

Sunita Williams Return Date, Time, Live Streaming: விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்ட பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு வருகை தரவுள்ளனர். இதற்காக சுமார் 17 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘They’re on the way’: NASA astronauts Sunita Williams, Butch Wilmore depart space station for 17-hour trip back to Earth

 

Advertisment
Advertisements

செவ்வாய்கிழமை அதிகாலை ஸ்பேஸ்எக்ஸ் கேப்ஸ்யூல், சுற்றும் ஆய்வகத்தில் இருந்து இறக்கப்பட்டபோது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோருடன் மற்ற இரண்டு விண்வெளி வீரர்களும் இருந்தனர்.

அவர்கள் பூமிக்கு தரையிறங்குவதை எக்ஸ், யூடியூப் மற்றும் நாசா+ போன்றவற்றில் மாலை சுமார் 4:45 மணியில் இருந்து பார்வையிடலாம் என்று நாசாவின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அவர்கள் பூமியை அடைந்த பிறகு என்ன நடக்கும்?

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள விண்வெளி ஏஜென்சியின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள அவர்களது பணியாளர் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு, அவர்கள் பல நாட்கள் சுகாதார சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். நாசா நிபுணர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரின் ஐ.எஸ்.எஸ் மிஷன் நீண்டு விண்வெளியில் 286 நாட்கள் இருந்திருப்பார்கள். ஆனால், இதில் அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ விண்வெளியில் செலவிட்ட நாட்களை விட இது குறைவானது. அவர் தொடர்ச்சியாக விண்வெளியில் 371 நாட்கள் செலவிட்டார். ரஷ்ய விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் விண்வெளியில் இத்தனை நாட்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளிப் பயணம் மூலமாக விண்வெளியில் 608 நாட்களை செலவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் 675 நாட்களும், அதிகப்படியாக ரஷ்யாவின் ஒலெக் கொனொனென்கோ ஒட்டுமொத்தமாக 878 நாட்களும் விண்வெளியில் செலவிட்டனர்.

டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதும், வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் விரைவாக திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், அரசியல் காரணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், அவர்களை "கைவிட்டுவிட்டார்" என்று ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டினார்.

ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகரான ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ எலோன் மஸ்கும், அவர்கள் விரைவாக திரும்ப அழைப்பு விடுத்தார். ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் என்பது அமெரிக்காவின் ஒரே சுற்றுப்பாதை-வகுப்பு குழு விண்கலமாகும். 

spacex Nasa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: