Advertisment

பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரிப்-புக்கு பரிசு இதுதானா?

பதட்டத்தில் முடங்கிக் கிடக்கிறது பஞ்சாப் மாகாணம். இணைய சேவை முற்றிலும் முடக்கம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan Ex- PM Nawaz Sharif and Maryam Sharif returns to Lahore

Pakistan Ex- PM Nawaz Sharif and Maryam Sharif returns to Lahore

Pak Ex- PM Nawaz Sharif and Maryam Sharif returns to Pakistan: பனாமா நாட்டில், விதிமுறைகளை மீறி சொத்து சேர்த்தவர்களின் பட்டியல் 2015ஆம் ஆண்டு வெளியானது. இதில் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றது.

Advertisment

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஊழல் வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நவாஸ்ஸிற்கு 10 வருட காவல் தண்டனையும், அவருடைய மகள் மரியம் ஷெரீப் அவர்களுக்கு 7 வருட காவல் தண்டனையும், அவருடைய மருமகன் முகமது சஃப்தார் அவான் அவருக்கு 1 வருட தண்டனையும் வழங்கி இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

லண்டனில் இருக்கும் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நாவஸின் மனைவி குல்சம் ஷெரீபினை காண்பதற்காக லண்டன் சென்றுள்ளனர். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு இருவரும் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பி வருகிறார்கள்.

அபுதாபியில் இருந்து பாகிஸ்தான் வரும் விமானம் தாமதமானதால், அவர்களை கைது செய்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த கைது நடவடிக்கைகாக 10,000 போலீசாரை நியமித்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. மேலும் லாகூரில் இக்கைது நடவடிக்கை எடுக்க இருப்பதால் பஞ்சாப் மாகாணம் முழுவதும் இணைய சேவையை முடுக்கி உள்ளார்கள். இன்று இரவிற்குள் இருவரையும் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குல்சம் அவர்களுக்கு பிரியாவிடை தருவதையும், அபுதாபியில் விமானத்திற்காக காத்திருப்பதையும், விமானத்தில் பயணம் செய்வதையும் ட்விட்டரில் தொடர்ந்து மரியம் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற 25ம் தேதி, பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இக்கைது நடவடிக்கை என்பது ஊழலுக்கு எதிரானதா, இல்லை அரசியல் காரணங்களால் நடத்தப்படுகிறதா என்ற குழப்பமும் மக்கள் மனதில் நிலவி வருகிறது.

Nawaz Sharif
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment