Advertisment

ட்வீட்கள் காரணமாக வெள்ளை மாளிகையில் முக்கிய வாய்ப்பை இழந்தார் இந்திய வம்சாவளி

சில ஆண்டுகளுக்கு முன்பு நீரா குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக தீவிரமாக ட்விட்டரில் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

author-image
WebDesk
New Update
Neera Tanden appears before a Senate Committee on the Budget hearing on Capitol Hill in Washington. (Anna Moneymaker/The New York Times via AP, Pool, File)

அதிபர் மாளிகையின் மேலாண்மை மற்றும் நிதி அலுவலக பொறுப்பை ஏற்க நீரா டாண்டன் ஜோ பைடனால் பரிந்துரை செய்யப்பட்டார். மத்திய வரசு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் இந்த அலுவலகம் அதிபர் ஜோ பைடனுக்கு உதவும். ஆனால் அவர் பொறுப்பேற்க நடத்தப்பட்ட செனெட் வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் டாண்டன்.

Advertisment

50 வயதாகும் இந்திய வம்சாவளியான நீரா டாண்டன், கடந்த காலங்களில் பல அதிகாரிகளை விமர்சனம் செய்து பதிவிட்ட ட்வீட்களால் தற்போது இந்த பதவியை எட்ட முடியாமல் போய்விட்டது. அவருடைய பதவிக்கான பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என்று நீரா பைடனுக்கு கடிதம் எழுத அதனை அவர் உறுதி செய்தார்.

தற்போது இல்லை என்றாலும், வேறொரு வகையில் நீராவின் தகுதிக்கு ஏற்ற நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று பைடன் கூறியுள்ளார். முக்கியமான கமிட்டி உறுப்பினர்களுக்கான 23 பதவிகளில் 11 பதவிகளுக்கான அலுவலர்களை பைடன் பரிந்துரை செய்துள்ளார். நீராவின் “திரும்பப் பெறும் முடிவு” பைடனின் நிர்வாகத்திற்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

”நீங்களும் உங்களின் குழுவும் என்னுடைய பொறுப்பினை உறுதி செய்வதில் மிகவும் உறுதியாக இருந்தீர்கள் ஆனால், தற்போது என்னுடைய பணி நியமனம் உறுதி ஆகாது என்பது தெளிவாகிவிட்டது. என்னுடைய நியமன உறுதி உங்களின் பல்வேறு முக்கியமான வேலைகளுக்கு இடையே உறுத்தல்களாக அமையக் கூடாது. எனவே என்னுடைய நியமன பரிந்துரையை திரும்பப் பெறவும்” என்று நீரா, பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நீரா குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக தீவிரமாக ட்விட்டரில் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அதனை மனதில் கொண்டு அவரின் நியமனத்திற்கு எதிராக பலரும் தற்போது  வாக்களித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment