நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி காலமானார்.

நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தில் மண்டேலாவுக்கு துணையாக இருந்த அவரின் மனைவி வின்னி காலமானார்.

தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்றிழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் முன்னால் மனைவி வின்னி காலமானார். 81 வயதாக இவர் உடல் நலக்குறைவார் மருத்துவமனையில் அவர் உயிர் நேற்று பிரிந்தது.

தென் ஆப்பிரிக்காவின் முன்னால் அதிபர் நெல்சன் மண்டேலா. 1958ம் ஆண்டு வின்னி மற்றும் மண்டேலா திருமணம் செய்துகொண்டனர். 40 ஆண்டுக் காலம் திருமண வாழ்க்கையில் இருவர் பிரிந்து வாழ்ந்த காலங்களே அதிகம். 27 ஆண்டுகள் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த நேரத்தின் வின்னி அவரைப் பிரிந்தே வாழ்ந்தார்.

Mandela wife Winnie

1990ம் ஆண்டு சிறையை விட்டு வெளியேறிய மண்டேலாவுடன் கரம் கோர்த்து நடந்து வந்த நிகழ்வு பெரும்பாலும் பேசப்பட்ட ஒன்று. நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தில் மண்டேலாவுக்கு துணையாக நின்றவர். மேலும் மண்டேலாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்குகளின் இருந்தவர் வின்னி.

இவர் கடந்த சில நாட்களாகவே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close