Advertisment

நேபாளத்தில் 22 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்... 14 சடலங்கள் மீட்பு

மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை நேபாள் ராணுவத்தின் மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
நேபாளத்தில் 22 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்... 14 சடலங்கள் மீட்பு

4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை, நேபாள ராணுவம் திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பேசுகையில், முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் சனோஸ்வெர் என்கிற இடத்தில் உள்ள மலைபகுதியில் விமானம் விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக திங்கட்கிழமை காலை வரை மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. தேடுதல் பணியில் நேபாள் ராணுவ ஹெலிகாப்டரும், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டு எடுத்துச் செல்லப்பட உள்ளது

விமானம் பயணித்த விவரத்தை வெளியிட்ட flightradar24.com, காலை 9.55க்கு போகார பகுதியில் புறப்பட்ட விமானத்தின் கடைசி சிக்னல் 10.7 மணிக்கு கிடைத்ததாகவும், அதன்பிறகு, விமானம் ரேடாரில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாரா ஏர் விமானம் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகார நகரத்திலிருந்து, மலை நகரமான ஜோம்சோமுக்கு செல்லும் 20 நிமிட திட்டமிடப்பட்ட விமான சேவை ஆகும். விமானம் பெரிய பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலைய கோபுரத்துடன் தொடர்பை இழந்தது.

விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மன்கள் என 6 வெளிநாட்டினர் பயணித்தனர். விமானத்தில் பயணித்த இந்தியர்கள் வைபவி பண்டேகர், அசோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி மற்றும் ரித்திகா திரிபாதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தானேவில் உள்ள உள்ளூர் போலீசார் கூற்றுப்படி, அசோக் - வைபவி இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால், நேபாளில் ஜோம்சம் விமான நிலையத்திலிருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ள முக்திதம் கோவிலுக்கு 2 குழந்தைகளுடன் பயணித்துள்ளனர்.

நான்கு இந்தியர்களைத் தவிர, அந்த விமானத்தில் இரண்டு ஜேர்மனியர்கள், 13 நேபாளிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர். விமானத்தை இயக்கிய பிரபாகர் கிமிரேவுக்கு, மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் பறந்த அனுபவம் கொண்ட மூத்த பைலட் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nepal Flight Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment