நேபாள புதிய வரைபட மசோதா; நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றம்
நேபாளத்தின் தேசிய சட்டமன்றம், இந்திய பிராந்தியங்களை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
நேபாளத்தின் தேசிய சட்டமன்றம், இந்திய பிராந்தியங்களை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
Advertisment
நேபாள நாடளுமன்றத்தின் கீழ் அவை சனிக்கிழமை புதிய வரைபடத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது. இதையடுத்து, நேபாளத்தின் பிராந்திய உரிமைகோரல்களை செயற்கையான விரிவாக்கம் என்று இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது.
நேபாள தேசிய சட்டமன்றம் அல்லது நேபாள நாடாளுமன்றத்தின் மேலவை அந்நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை அதன் தேசிய சின்னத்தில் சேர்ப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.
இந்த மசோதா அனைத்து 57 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றப்பட்டது.
மே 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள முக்கியமான சாலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்தன.
நேபாளம் இந்த சாலை தனது பிரதேசத்தை கடந்து சென்றதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. சில நாட்களுக்குப் பிறகு, நேபாளம் புதிய வரைபடத்துடன் லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவை அதன் பிரதேசங்களாகக் காட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"