நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவிற்கு விமானப் பணியாளர்கள் 4 பேர் மற்றும் 68 பயணிகள் உடன் புறப்பட்ட விமானம் சுமார் 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவிற்கு 5 இந்தியர்கள் உட்பட 72 பேர்களுடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் ஏடிஆர் 72 விமானம் நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவிற்கு விமானப் பணியாளர்கள் 4 பேர் மற்றும் 68 பயணிகள் உடன் புறப்பட்ட விமானம் சுமார் 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் இன்று பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது 68 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் விமானத்தில் இருந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், “யாராவது உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 தென் கொரியர்கள் மற்றும் 1 ஐரிஷ் பிரஜை இருந்ததாக நேபாள விமான நிலைய அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த துயர சம்பவத்தை அடுத்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசரமாக அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஃப்ளைட் ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின்படி விபத்துக்குள்ளான விமானம் 15 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏடிஆர் 72 என்பது ஏர்பஸ் மற்றும் இத்தாலியின் லியோனார்டோவின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம் ஆகும்.. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஏடிஆர் 72-500 விமானங்களைக் வைத்துள்ளது என்று அதன் வலைத்தளத்தின்படி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து மார்ச் 2018-க்கு பிறகு நேபாளத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும். டாக்காவில் இருந்து அமெரிக்க-பங்களா டாஷ் எட்டு டர்போபிராப் விமானம் காத்மாண்டுவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 71 பேரில் 51 பேர் உயிரிழந்தன என்று ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“