ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான பிரதமர் கே பி ஷர்மா ஒலி மற்றும் புஷ்பா கமல் தஹால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து வருவதால், தன்னை வீழ்த்துவதற்காக இந்தியா தனது போட்டியாளர்களைத் தூண்டுவதாக பிரதமர் ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisment
“அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நடக்கும் விஷயங்கள் சிந்திக்க முடியாதது. டெல்லி ஊடகங்களைக் கேளுங்கள். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களைப் பாருங்கள்" என்று ஓலி கூறினார், தனது அரசாங்கத்தை கவிழ்க்க“ சதி ”என்று கூறப்படுகிறது. "வெளி சக்திகள் உள்ளே நுழைந்து கவிழ்க்கும் , நேபாளத்தின் தேசியவாதம் என்பது பலவீனமானதல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்" என்று பிரதமர் ஒலி கூறினார்.
துகுறித்து மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது.
நேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 நாட்களில் மாற்றிவிடலாம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சமயத்தில் என்னை வெளியேற்றிவிட்டால் நேபாளத்துக்கு ஆதரவாக பேச ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த நபர் உடனடியாக நீக்கப்பட்டு விடுவார். நான் எனக்காகப் பேசவில்லை, நாட்டுக்காகப் பேசுகிறேன். நம் கட்சி, நம் நாடாளுமன்ற கட்சிகள் இந்தப் பொறிகளில் சிக்கக் கூடாது. இதற்காக முயற்சிப்பவர்கள் முயற்சிக்கட்டும். ” என்றார்.
நாடாளுமன்றத்தில் பிரசந்தாவுக்கு எதிர்க்கட்சியினரும் மாதேஇ சி பிரிவு உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil