scorecardresearch

இலங்கையில் புதிய வகை பறவை இனம் கண்டுபிடிப்பு: அனுமன்  ப்ளோவர்

New Endemic Bird Specied Found In Srilanka : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் பாக்கு நீரிணையில் (Palk Strait) உள்ள மணற் திட்டுல் அதிகமாக காணப்படுவதால் இதற்கு அனுமன்  ப்ளோவர் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.   

இலங்கையில் புதிய வகை பறவை இனம் கண்டுபிடிப்பு: அனுமன்  ப்ளோவர்

கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இலங்கையில் புதிய வகை பறவை இனமொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த வகை பறவைக்கு சிங்கள மொழியில் அனுமன் ஒலிவியா என்றும், ஆங்கிலத்தில் அனுமன்  ப்ளோவர்  என்றும் பெயரிட்டுள்ளனர்.

புதிய வகை பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் ஜூட் ஜானித் நிரோஷன் இந்த புதிய கண்டுபிடிப்பை, பலகலைக்கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரயர் சம்பத் செனவிரத்ன மேற்பார்வையில் கண்டுபுடித்தார்.

இந்த பறவை முதலில் கென்டிஷ் ப்ளோவரின் என்பதன் துணை இனமாக தவறாக அறியப்பட்டது.  கென்டிஷ் ப்ளோவர் வகை பறவைகள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்து புலம் பெயர்ந்து (Northern Hemisphere) ஆண்டுதோறும் இலங்கையில் புகலிடம் அடைகின்றன.  தற்போது, கண்டறியப்பட்ட அனுமன் ஒலிவியா புலம்பெயர் பறவை இல்லை என்பதையும்,  இலங்கை குறுநிலப்பரப்பு இனங்கள் என்பதையும்  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் பாக்கு நீரிணையில் (Palk Strait) உள்ள மணற் திட்டுல் அதிகமாக காணப்படுவதால் இதற்கு அனுமன்  ப்ளோவர் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

இமயமலை, பாலைவனம், கடற்கரை, மழைக்காடுகள், தீவுகள் என இயற்கை வளம் கொண்ட நாடாக இந்தியா விளங்கும் இந்தியாவில் பல வகையான பறவைகள் வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: New endemic bird specied found in srilanka hanuman oleviya or hanuman plover

Best of Express