New symptoms of coronavirus covid19 : கொரோனா நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இந்நோய்க்கு பொதுவான சில அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடல்வலி, சளி, தொண்டை வறட்சி, வரட்டு இருமல், காய்ச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஐரோப்பாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட அவர்களில் பெரும்பாலானோருக்கு பாதத்தின் அடிப்பக்கம் மற்றும் பக்கவாட்டு தோள்களில் நிறம் பழுப்பு நிறமாக மாறுவதாகவும், அதில் அரிப்பு ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு இதேபோன்று கைகளிலும் அரிப்பு மற்றும் நிறமாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. சுவாச மண்டலத்தின் மேல் பகுதியை வைரஸ் தாக்குவதால் கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியை ஸ்பெயின் மருத்துவர்கள் 365 பேரிடம் மேற்கொண்டு இருக்கின்றனர் அவர்களில் பெரும்பாலானோருக்கு தோலின் நிறம் பழுப்பாக இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்றமடைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடலில் அரிப்பு ஏற்படுவதாக பல நோயாளிகளும் அறிவித்திருந்தனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்ற நேரத்தில், உடலில் எரிச்சல் உண்டாவதாக பலரும் அறிவித்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“