/tamil-ie/media/media_files/uploads/2020/08/Coronavirus-New-Zealand-marks-100-days-without-community-spread.jpg)
New Zealand lifts all pandemic restrictions except Auckland : கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பொருளாதார தேவைகளுக்காக மட்டுமே சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுதல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல் போன்றவற்றிற்கு இன்னும் தடை நிலவி வருகிறது.
ஐரோப்பியாவில் கொரோனா பரவலை மிகவும் திறமையுடன் கையாண்டு அதனை முடிவுக்கு கொண்டு வந்த நாடுகளில் முதன்மையானதாக இருக்கிறது நியூசிலாந்து. மார்ச் மாதத்தில், மற்ற நாடுகளுக்கு முன்பே கொரோனா ஊரடங்கின் பிறப்பித்து உத்தரவிட்டார் ஜெசிந்தா. மேலும் எல்லைகள் மூடப்பட்டு வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முற்றிலுமாக கொரோனா கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு மே மாதத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தலை தூக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் ஆக்லாந்து பகுதியை தவிர இதர பகுதிகளில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதால் முழுமையாக ஊரடங்கு தடைகளை நீக்கி உத்தரவிட்டார் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us