நியூசிலாந்து நாட்டின் பிற்பகல் 1.40 மணியளவில் செண்ட்ரல் கிரைஸ்ட்சர்ச்சு அருகே உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த நேரத்தில் அப்பகுதி அருகே இருந்த வங்க தேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இருப்பினும் மசூதிக்கு உள்ளே இருந்த சில வீரர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
New Zealand Mosque Shooting : நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்தவுடன் அந்நாட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன், நியூசிலாந்துக்கு இன்று ஒரு கருப்பு தினம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் கூறுகையில், “துப்பாக்குச்சூடு சத்தம் கேட்டவுடன் அணி வீரர்கள் வேகமாக அங்கிருந்து ஓடினார்கள். எத்தனை முறை துப்பாக்குச்சூடு நடந்தது எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தார். தற்போது விளையாட்டு வீரர்கள் அனைவரும் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.