கடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தாவின் லேபர் கட்சி மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியில் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி, இலங்கை வம்சாவளி மற்றும் முதல் லத்தீன் அமெரிக்கர் உட்பட 40 பேர் பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக செல்கின்றனர்.
க்ரீன் பார்ட்டியின் 10 இடங்களில் 7 பெண்கள் உட்பட, லேபர் கட்சியின் 64 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியினரில் 55% பேர் பெண்கள். 16 நபர்கள் அந்நாட்டின் பூர்வகுடிகளான மாவோரி இனத்தை சேர்ந்தவர்கள். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணும், இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணும் இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தேசிய கட்சியிலும் 31% பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க : நியூசிலாந்து தேர்தல் : எம்.பி.யாக பொறுப்பேற்ற முதல் தமிழ் பெண்
இதுவரை இல்லாத அளவில் மொத்தமாக 48% பெண்கள் தற்போதைய நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10% நபர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்முகத்தன்மை கொண்ட பாராளுமன்றம் பல்வேறு சிறப்பான சாதனைகளை செய்யும் என்று பலரும் தங்களின் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil