இன்னல்களை கண்டு சிறிதும் மனம் தளராதவர் எனப் பெயர்பெற்ற நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த பிறகு, தனது தொலைக்காட்சி நேர்காணலை தொடர்ந்தார்.
Advertisment
ஜெசிந்தா ஆர்டெர்ன், இன்று காலை வெலிங்டனில் உள்ள நியூசிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவாறு, ரியான் பிரிட்ஜுடன் தொகுத்து வழங்கிய 'தி ஏஎம் ஷோ" என்ற நேரலை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில்,"நாங்கள் இங்கே ஒரு நிலநடுக்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம், ரியான் என்று ஜெசிந்தா புன்னகைத்தார். வளாகத்தின் கட்டமைப்பு வலுவாக உள்ளது,பாதுக்காப்பான இடத்தில் இருப்பது போல் உணர்கிறேன். நிகழ்ச்சியைத் தொடரலாம் என்று எந்தவித பதட்டமின்றி தெரிவித்தார்.
காலை 7:53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெலிங்டனுக்கு வடக்கே சுமார் 50 மைல் தொலைவில் உள்ள லெவின் நகரத்திற்கு அருகே மையமாக இருந்தது. இது ஆக்லாந்தில் 260 மைல் தொலைவில் உணரப்பட்டது.
இந்த நூற்றாண்டில், நியூசிலாந்து நாட்டின் மிகப் பிரபலமான பிரதமர் ஆர்டெர்ன் என்று சமிபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்தது. கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் நோயை தொற்றை நிர்வகித்த விதம் இவரின் தலைமை பண்புக்கு சான்றாக அமைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil