இங்கிலாந்து இளவரசர் ஹாரியை மணந்தார் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே!

ஹாரிக்கும், நடிகை மேகன் மார்கலுக்கும் திருமணம் நடந்தது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்திய நேரப்படி, இன்று மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர்.  திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் இங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.

பின், திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் தயாராக வைக்கப்பட்டிருந்த அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டனர். தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 19-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சாரட் வண்டியை விண்ட்சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து சென்றன.

பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close