Nirav Modi arrested in England : லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடியை கைது செய்ய உத்தரவு விதித்ததைத் தொடர்ந்து, லண்டன் அதிகாரிகள் நீரவ் மோடியை கைது செய்தனர். உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 03 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர் காவலர்கள். தற்போது அவர் ஹோல்பார்ன் ட்யூப் பெருநகர் காவல் நிலையத்தின் கஸ்டடியில் இருக்கிறார்.
Nirav Modi arrested in England
அக்காவல் நிலையம் வெளியிட்ட அறிக்கையில், நீரவ் தீபக் மோடி, இந்திய அதிகாரிகளின் உத்தரவின் படி 19 மார்ச் அன்று ஹோல்பர்னில் கைது செய்யப்பட்டார். வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் புதன் கிழமை சமர்பிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து ரூ.13,500 கோடி பணத்தினை முறைக்கேடு செய்து தலைமறைவானர். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய காவல் துறை.
11 சொகுசு கார்களை விற்பனை செய்ய அமலாக்கத்துறை முடிவு
வெஸ்ட் எண்டில் இருக்கும் செண்டர் பாய்ண்ட் ஆப்பார்ட்மெண்டில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நீரவ் மோடியின் மனைவி ஏமி மோடி மீதும் பெயிலில் வெளி வர இயலாத அளவிற்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் இருந்த விலையுயர்ந்த 11 கார்களை விற்பனை செய்ய அமலக்கத்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : விஜய் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் கொடுத்த அதிரடி அறிவிப்பு