இலங்கை அரசியல் சூழ்நிலை : இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் சிறிசேனா நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் என அந்நாட்டின் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் சிறிசேனா.
இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம்
இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாட்டின் பிரதமர் யார் என்ற சர்ச்சை இலங்கையில் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று பொலன்னறுவையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் இலங்கையின் அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார். அதில் அந்நாட்டின் வளர்ச்சி, வேலை திட்டங்களில் மேம்பாடு மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறம்பட டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என கட்டளை இட்டுள்ளார். வனப்பகுதிகளை அதிகரிப்பது, வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பது போன்றவை குறித்தும் பேசப்பட்டது. இலங்கையில் 2019ம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்த உள்ளதாக சிறிசேனா அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?